காதலியை இம்ப்ரஸ் செய்வதற்காக, ஒட்டக குட்டியைத் திருடிப் பரிசளித்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் தான், இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தார். 

பிறந்த நாளுக்கு சில நாட்களுக்கு முன்பாக, தனது காதலனிடம் “விலை உயர்ந்த ஒட்டக்கத்தை எனக்கு பிறந்த நாள் பரிசாக நீ தர வேண்டும்” என்று, அந்த பெண் கேட்டிருக்கிறார்.

ஆனால், அந்த காதலன் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், விலை உயர்ந்த ஒட்டகத்தை வாங்கும் அளவுக்குப் பணம் இல்லை. 

அதே நேரத்தில், தன் காதலியின் ஆசையை எப்படியும் நிறைவேற்றியே தீவர வேண்டும் என்றும், நெஞ்சுக்குள் ஒரு வைராக்கியத்தோடு இருந்திருக்கிறார்.

அத்துடன், “தன் காதலியை ஆசையை எப்படி நிறைவேற்றுவது?” என்று, அவர் நன்றாக யோசித்துப் பார்த்திருக்கிறார். அதன்படி, ஒரு திட்டத்தையும், அவர் தீட்டியிருக்கிறார்.

காதலியின் ஆசையை நிறைவேற்றத் திட்டம் போட்டபடி, “அங்கிருக்கும் ஒரு ஒட்டக பண்ணையில் இருக்கும் ஒட்டகத்தைத் திருடும்” வேலைகளில் காதலன் ஈடுபட்டு இருக்கிறார்.

அதன் படியே, பக்கவாக பிளான் பண்ணி, அந்த பண்ணையில் இருந்த விலை உயர்ந்த ஒரு ஒட்டக குட்டியைத் திருடிச் சென்று, தனது காதலிக்கும் பிறந்த நாள் பரிசாக அதனை அந்த காதலன் கொடுத்திருக்கிறார். 

அதே நேரத்தில், அந்த ஒட்டக பண்ணையின் உரிமையாளர், “தனது ஒட்டக பண்ணையில் இருந்த ஒட்டக குட்டி ஒன்றைக் காணவில்லை” என்று, ஐக்கிய அரபு அமீரக காவல் துறையிடம் புகார் மனு அளித்திருக்கிறார். 

இதனால், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனாலும், போலீசாரால் காணாமல் போன ஒட்டக குட்டியைக் கண்டுபிடிக்க முடிய வில்லை.

அப்போது, “தான் திருடிய ஒட்டக குட்டியை தொடர்ந்து வளர்த்து வந்தால், மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில்” அந்த காதலன் இருந்திருக்கிறான்.

மேலும, “காணாமல் போன ஒட்டகம் குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என்ற தகவலும், அந்த காதலன் கவனத்திற்குச் சென்று உள்ளது. இதனால், அந்த காதலன் இன்னும் நடுங்கிப் பயந்து உள்ளான்.

இதனால், போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக மீண்டும் ஒரு புதிய திட்டத்தைத் தீட்டியிருக்கிறான். 

அதன் படி, அந்த ஒட்டக குட்டியை போலீசாரிடம் ஒப்படைத்து விடலாம் என்றும், அவருக்கு யோசனை வந்துள்ளது.

திட்டமிட்டபடியே, போலீசாருக்கு போன் மூலம் அழைத்து “இந்த பகுதியில் ஒரு ஒட்டக குட்டி சுற்றி சுற்றி வருகிறது” என்று கூறியிருக்கிறார்.

அதன் படியே, சம்ப இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த ஒட்டக குட்டியை மீட்டு உள்ளனர்.

மேலும், “மாயமான ஒட்டக குட்டி, இங்கே எப்படி வந்தது?” என்று, போலீசாருக்கு தகவல் தெரிவித்த நபரிடம் விசாரித்து உள்ளனர். இதற்கு, அந்த நபர் 

எத்தனையோ கதைகளைக் கூறி போலீசாரிடம் கூறியிருக்கிறார். ஆனால், எந்த கதையும் நம்பும் படியாக இல்லாததால், போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரித்து உள்ளனர்.

அப்போது, “ தனது காதலிக்குப் பிறந்த நாள் பரிசு அளிப்பதற்காக ஒட்டகத்தைத் திருடியதை” அவர் ஒப்புக்கொண்டார். 

இதனையடுத்து, ஒட்டக குட்டியை உரிமையாளரிடம் ஒப்படைத்த போலீசார், அந்த திருட்டில் ஈடுபட்ட காதலனையும், பரிசு கேட்ட காதலியையும் கைது செய்து, 
இருவரையும் சிறையில் அடைத்தனர். இந்த செய்தி, அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.