மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் யாதவ் வாடியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது வீரர் ஒருவர் மாரடைப்பால் தரையில் சாய்ந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


புனே மாவட்டத்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்தது. 47 வயதான பாபு நல்வடே என்ற கிரிக்கெட் வீரர் பேட்டிங்கின் மறுமுனையில் நின்று கொண்டிருந்த போது, திடீரென தரையில் சரிந்து விழுந்தார். உடனே நடுவர் மற்றும் மற்ற வீரர்கள், பாபு நல்வடேவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பாபு நல்வடே  ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனையில்  அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த வீரர் மைத்தானத்திலேயே மாரடைப்பால் தரையில் சரிந்து விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.