இந்திய சினிமாவின்  இசை ஜாம்பவான்களில் ஒருவர் இசைப்புயல் A.R.ரகுமான். இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் A.R.ரகுமான். ரஹ்மானின் வருகைக்குப் பிறகு இந்தியத் திரை இசையின் சத்தம் மாறியது. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளை நெருங்கிய  A.R.ரகுமானின் இசை பயணம் இன்றும் தன் இசை மழையால் ரசிகர்களை நனைத்துக் கொண்டிருக்கிறது.  

இசையமைப்பாளர் A.R.ரகுமான் தற்போது தயாரிப்பாளராகவும் கதாசிரியராகவும் உருவெடுத்துள்ளார். அதுதான் 99 சாங்ஸ் திரைப்படம். வெகுநாட்களாக இசை சார்ந்த ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற பேர் ஆர்வத்தில் இருந்த A.R.ரகுமான் தானே கதை எழுதி தயாரித்து இசையமைத்துள்ள திரைப்படம் 99 சாங்ஸ். 

விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இத்திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். ஈஹான் பட் மற்றும் எடில்ஸி வர்காஸ்  இத்திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாரான இத்திரைப்படம் .கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

arrahman 99songs movie releases in netflix

இந்நிலையில் இத்திரைப்படம் இப்போது ஓட்டிட்டு தளத்தில் வெளியாக உள்ளது. பிரபல OTT தளமான நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் ஹிட் திரைப்படம் வருகிற மே 21ம் தேதி வெளியாக உள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இசைப்புயல் A.R.ரகுமான் பதிவிட்டுள்ளார்.