தெலுங்கு திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் ஜூனியர் NTR. நின்னு சூடாலனி  திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்துள்ளார். அடுத்ததாக தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகி வரும் RRR  திரைப்படத்திலும் நடித்து வருகிறார். 

இந்நிலையில் நாளை  பிறந்தநாள் காணும் ஜூனியர் NTR தனது பிறந்த நாள் குறித்து ரசிகர்களுக்கு ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில், அவரது ரசிகர்கள் தினசரி அவருக்கு அனுப்பும் வாழ்த்துக்கள் வீடியோக்கள்  அனைத்துக்கும் நன்றி சொல்லிய ஜூனியர் NTR. , ரசிகர்களின் அன்புக்கும் அவர்களின் பிரார்த்தனைகளுக்கும் கடன்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். 

மேலும்

“ஒவ்வொரு வருடமும் என் பிறந்த நாளின் போது நீங்கள் காட்டும் அன்பை கண்டு நான் நெகிழ்ந்துள்ளேன். ஆனால் இந்த சவாலான காலகட்டத்தில் அரசாங்கத்தின் அறிவுறுத்தலின்படி ஊரடங்கை மதித்து பின்பற்றுங்கள் அதுவே இந்த பிறந்த நாளுக்கு நீங்கள் எனக்குத் தரும் மிகப்பெரிய பரிசு”

என குறிப்பிட்டுள்ளார். 

“நம் நாடு கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் இருக்கிறது. நமது மருத்துவத் துறையை சார்ந்த பணியாளர்களும் முன்கள பணியாளர்களும் இந்தப் போரில் ஓய்வின்றி தன்னலமின்றி போராடி வருகிறார்கள் மக்கள் பலர் தங்களது அன்பிற்குறியவர்களை  இழந்துள்ளனர். எனவே இது கொண்டாட்டத்திற்கான நேரமல்ல. நமது ஒற்றுமையை காட்டும் நேரம். அனைவரும் உங்களது குடும்பத்தினர் மற்றும் அன்பிற்குரிய அவர்களுடன் பாதுகாப்புடன் ஒருவருக்கொருவர் ஆதரவாக கைகோர்த்து இருங்கள்.இந்தக் கொரோனாவுக்கு எதிரான போர் முடிந்து அதில் நாம் வெற்றி பெற்றவுடன் நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடுவோம். முகக்கவசம் அணியுங்கள் வீட்டிலேயே இருங்கள்"

ஜெய்ஹிந்த் 

உங்கள் 

Jr.NTR

என பதிவிட்டுள்ளார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜூனியர் என்டிஆர் தனது ரசிகர்களுக்கு விடுத்துள்ள இந்த வேண்டுகோளை பலரும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.