தமிழ் சினிமாவின் முக்கியமான ஆடை வடிவமைப்பாளர்களில் ஒருவர்  அனு பார்த்தசாரதி. மறைந்த மூத்த திரைப்பட நடிகர், திரைக்கதையாசிரியர் மற்றும் இயக்குனருமான  வியட்னாம் வீடு சுந்தரம் அவர்களின் மகளான அனு பார்த்தசாரதி தமிழ் சினிமாவின் பல வெற்றித் திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

குறிப்பாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் ஜீன்ஸ் ,எஸ் ஜே சூர்யாவின் வாலி ,குஷி,  நடிகர் கமல்ஹாசனின் தெனாலி பஞ்சதந்திரம் உள்ளிட்ட திரைப்படங்களுக்கும் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். மேலும் இயக்குனர் மணிரத்தினத்தின் குரு ,இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் வேட்டையாடு விளையாடு மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஆடுகளம் திரைப்படத்திற்கும் ஆடை வடிவமைப்பாளராக  பணியாற்றியுள்ளார். 

இந்நிலையில் அனு பார்த்தசாரதியின் ஆடை வடிவமைப்பு குழுவில் இருக்கும் முக்கிய நபரான ஹரிகேஷ் இன்று உயிரிழந்துள்ளார்.  அனு பார்த்தசாரதி பணிபுரிந்த அனேக திரைப்படங்களுக்கு அனு பார்த்தசாரதியோடு இணைந்து குழுவில் முக்கிய பணியாற்றிய ஹரிகேஷ்  தற்போது உயிரிழந்துள்ளது திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தளபதி விஜய், நடிகர் அஜித் குமார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் ஆடை வடிவமைப்பில் பணியாற்றிய ஹரிகேசன் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஹரிகேஷின் மறைவு குறித்து அனு பார்த்தசாரதி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.