கடைக்கு சென்ற இளம் பெண்ணை, காரில் வந்த கும்பல் ஒன்று வனப் பகுதிக்குக் கடத்திச் சென்று, கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் மானேசர் பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளம் பெண் ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

தற்போது, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2 வது அலை மிக தீவிரமாகப் பரவிக்கொண்டு இருக்கும் நிலையில், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால், நாட்டின் பெரும்பாலான முக்கிய சாலைகள் அனைத்தும் போக்குவரத்தின்றி, வெறிச்சோடி காணப்படுகின்றன.

இப்படியான நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரப் பிரதேசம் மாநிலம் மானேசர் பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளம் பெண், மட்டன் வாங்குவதற்காகக் கடைக்கு வந்திருக்கிறார்.  

அப்போது, கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்ததால் அவரால் மட்டன் வாங்க முடியவில்லை. இதனால், அந்த பகுதியைச் சேர்ந்த தனது ஆண் நண்பர்கள் மூலமாக விசாரித்த அந்த பெண், “சற்று தொலைவில் மட்டன் கடை இருக்கும் என்றும், அங்கு சென்றால் மட்டன் வாங்கலாம்” என்று, நண்பர்களின் ஆலோசனையைக் கேட்டு, அவர்களுடன் சேர்ந்து குறிப்பிட்ட அந்த கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மட்டன் வாங்க வந்த அந்த பெண்ணுடன், அவருடைய இரு ஆண் நண்பர்களும் கூடவே நடந்து வந்தார்கள். அப்போது, ஊரடங்கு நேரம் என்பதால், அந்த பகுதியில் பொது மக்கள் நடமாட்டமில்லை. அப்படியான சூழ்நிலையில், அந்த பெண் தனது இரு நணர்பளுடன் பேசிக்கொண்டே சாலையில் நடந்துச் சென்றுகொண்டிருந்தார். 

அந்த நேரம் பார்த்து எதிரே வந்த ஒரு கார், அந்த பெண்ணின் அருகில் வந்து திடீரென்று வந்து நின்று உள்ளது. அப்போது, அந்த காரில் இருந்து இறங்கிய 3 பேர் கொண்டு கும்பல், கண் இமைக்கும் நேரத்திற்குள், அந்த 20 வயது இளம் பெண்ணையும், அவரது இரு ஆண் நண்பர்களையும் அந்த காரில் கடத்தி, அருகில் உள்ள வனப் பகுதிக்குக் கொண்டு சென்று உள்ளனர்.

அந்த வனப் பகுதிக்குச் சென்றதும், அந்த இளம் பெண்ணின் ஆண் நண்பர்கள் இருவரையும் பிணையக் கைதிகளாக, அங்குள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்தனர்.

இதனையடுத்து, அந்த 20 வயதான பெண்ணை, காரில் வந்த 3 இளைஞர்களும் சேர்ந்து மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். இதில், அந்த இளம் பெண் அங்கேயே மயங்கி உள்ளார். ஆனாலும், அந்த வெறிபிடித்த மிருகங்கள் விட வில்லை. பாலியல் இன்பத்தில், அந்த செயல்பாட்டிலேயே இருந்து உள்ளனர். ஒரு கட்டத்தில், அந்த 3 பேருக்கும் பாலியல் இச்சைகள் எல்லாம் தீர்ந்த பிறகு, அந்த பெண்ணை அந்த நடு காட்டிலேயே மயங்கிய நிலையில் விட்டு விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்று உள்ளனர்.

பின்னர், இரவு நேரத்தில் அந்த நடு காட்டுப் பகுதியில் மயக்கம் தெளிந்து கண் விழித்துப் பார்த்து உள்ளார். அப்போது, தனது உடலில் துளியும் ஆடைகள் இல்லாமல், சில ரத்த காயங்கள் இருப்பதைக் கண்டு கதறி அழுது உள்ளார். எனினும், அழுது தீர்த்த பிறகு, தனது ஆடைகளைத் தேடிப் பிடித்து அற்றை எடுத்துக்கொண்டு, தன்னுடன் வந்த தனது சக இரு ஆண் நண்பர்களைத் தேடி உள்ளார். அப்போது, அவர்கள் இருவரும் சற்று தொலைவில் ஒரு மரத்தில் கட்டப்பட்டுத் தாக்கப்பட்டதும் தெரிய வந்தது. 

அதன் தொடர்ச்சியாக, நண்பர்களின் கட்டை அழித்து விட்டு அவர்களுடன் சேர்ந்து அந்த வன பகுதியை விட்டு வெளியே வந்துள்ளார்கள். பின்னர், அங்கிருந்து, நேராக அங்குள்ள காவல் நிலையத்திற்குச் சென்று தனக்கு நேர்ந்த கூட்டுப் பாலியல் பலாத்கார சம்பவம் குறித்து புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியும், பீதியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.