தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. தமிழ் சினிமாவில் நேருக்குநேர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சூர்யா, இன்று தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத கதாநாயகன் என்ற இடத்தில் உள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த சூரரைப்போற்று திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 

கடந்த வருடம் தீபாவளி வெளியீடாக அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியான  சூரரைப்போற்று திரைப்படம் ஒரு சுயசரிதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமாக இருந்தாலும் திரைக்கதையில் இருந்த விறுவிறுப்பும் படமாக்கப்பட்ட விதத்தினாலும் மக்களால் அதிகம் ரசிக்கப்பட்டது. இந்நிலையில் சூர்யாவின் அடுத்த திரைப்படத்திற்காக தமிழ் சினிமா ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

சூர்யா 39 என தற்காலிகமாக அழைக்கப்படும் புதிய திரைப்படத்தில் இயக்குனர் TJ.ஞானவேல் இயக்கத்தில்  நடிகர் சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். கர்ணன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த கதாநாயகி ராஜிஷா விஜயன் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். கூட்டத்தில் ஒருநாள் ,பயணம் திரைப்படங்களின் மூலம் திரைக்கதை ஆசிரியராக அறியப்பட்ட TJ.ஞானவேல் ,சூர்யா 39 திரைப்படத்தின் மூலம் இயக்குனராகிறார். சூர்யா 39 படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்துவருகிறது.

இத்திரைப்படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல். தற்போது கொடைக்கானலில் நடந்து வந்த படப்பிடிப்பு  முடிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் விரைவில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் டைட்டிலும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இத்திரைப்படத்தில் மலைவாழ் மக்களை சம்பந்தப்படுத்தி அந்த மக்களை சார்ந்து இருக்கும் சமூக பிரச்சினைகள் குறித்து  இப்படத்தின் கதை களம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற சூரரைப்போற்று திரைப்படத்திற்குப் பிறகு சூர்யா நடிக்கும்  பிரியா 39 திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.