தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சியான கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் நிறுவனம் சன் தொலைக்காட்சி.மக்களின் மனம் கவர்ந்த சீரியல்கள்,திரைப்படங்கள்,புதிய கேம் ஷோக்கள் என்று ரசிகர்களுக்காக புதிதாக ஏதேனும் ஒன்றை செய்து வருவார்கள்.

சன் டிவியின் சீரியல்களுக்கென்றும்,ஷோக்களுக்கு என்றும் தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது அனைவரும் அறிந்ததே.சன் டிவியின் மூலம் பலரும் பிரபலங்களாக மாறியுள்ளனர்.பல நடிகர்,நடிகைகள்,தொகுப்பாளர்களை சன் டிவி உருவாக்கியுள்ளது.சன் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக அசத்தி வருபவர் நக்ஷத்திரா.

சன் டிவியில் பல சூப்பர்ஹிட் ஷோக்களையும் , பல விருது விழாக்களையும் தொகுத்து வழங்கி அசத்தியிருந்தார் நக்ஷத்திரா.இவற்றை தவிர சேட்டை,வாயை மூடி பேசவும்,மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார்.இதை தவிர As Im Suffering From Kadhal என்ற வெப் சீரிஸிலும் நடித்து அசத்தியிருந்தார்.

2018 முதல் 2020 வரை சன் டிவியில் ஒளிபரப்பான லக்ஷ்மி ஸ்டோர்ஸ் தொடரின் நாயகியாக நடித்திருந்தார்.இந்த தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார் நக்ஷத்திரா.இதனை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி தொடரில் நடித்திருந்தார் இந்த தொடர் நிறைவடைந்தது.

நக்ஷத்திரா ராகவ் என்பவரை திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்திருந்தார்.இவர்களது நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன் நடந்தது.அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய சீரியலில் நக்ஷத்திரா ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்திருந்தது.

இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார் நக்ஷத்திரா , அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு இன்னும் திருமணம் முடியவில்லை தானே , உங்களது சில புகைப்படங்களை பார்த்து உங்களுக்கு திருமணமானதோ என்று குழம்பிப்போனேன் என்று தெரிவித்திருந்தார்.இதற்கு பதிலளித்த நக்ஷத்திரா பலரும் அப்படி தான் நினைத்துள்ளனர்,அந்த புகைப்படங்கள் எனது நிச்சயதார்த்தத்தில் எடுக்கப்பட்டவை என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

anchor nakshatra nagesh clarifies about her marriage confusions raghav