விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த வெற்றிகரமான தொடர்களில் ஒன்று குக் வித் கோமாளி.இந்த தொடரின் இரண்டாவது சீசனில் பிரபல மாடலும் நடிகையுமான பவித்ரா லக்ஷ்மி பபங்கேற்று அசத்தியிருந்தார்.இந்த தொடரின் மூலம் பட்டிதொட்டி எங்கும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் பவித்ரா.குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் கனவுக்கன்னியாக அவதரித்தார் பவித்ரா.

இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் சில குறும்படங்கள்,ஆல்பம் பாடல்கள் போன்றவற்றில் நடித்திருந்தார் பவித்ரா.மேலும் உல்லாசம் என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்தும் அசத்தியுள்ளார் பவித்ரா.உங்களில் யார் பிரபுதேவா நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்று அசத்தியிருந்தார்.மேலும் மிஸ் மெட்ராஸ் போன்ற சில பட்டங்களையும் வென்று அசத்தியுள்ளார் பவித்ரா.

தமிழில் ஏ.ஜி.எஸ் என்டேர்டைன்மென்ட் தயாரிக்கும் படத்தில் பவித்ரா ஹீரோயினாகி நடிக்கிறார்.இந்த படத்தின் ஹீரோவாக காமெடி நடிகர் சதிஷ் நடிக்கிறார்.இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது,இந்த புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் செம ட்ரெண்ட் அடித்தது.

தற்போது தமிழில் இவர் ஹீரோயினாக நடிக்கும் மற்றுமொரு படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.முக்கிய இளம் நடிகர்களில் ஒருவரான கதிர் நடிக்கும் புதிய படத்தில் பவித்ரா ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.அடுத்ததாக கதிர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் பவித்ரா நடிக்கிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

சமீபத்தில் கலாட்டாவுடனான நேர்காணலில் குக் வித் கோமாளி குறித்தும் தனது வாழ்க்கை குறித்தும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார் பவித்ரா.இதில் சிலர் அவர் கிராமங்களில் நடனமாடிய வீடியோக்களை தவறாக எடுத்துகொல்வதாக அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.இவரது இந்த தெளிவான விளக்கம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது,