“நான் வாழ்ந்து முடிச்சிட்டேன் தம்பி” என்று கூறி, இளைஞருக்கு மருத்துவமனை படுக்கையை விட்டுக்கொடுத்த முதியவர் அடுத்த 3 நாட்களில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் இப்படி ஒரு சோகமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

இந்தியா முழுமைக்கும் தீவிரமாகப் பரவிக்கொண்டிருக்கும் கொரோவின் 2 அலைக்கு பலரும் பாதிக்கப்பட்டு, தொடர்ச்சியாக உயிரிழந்து வரும் இந்த நிலையிலும் கூட, முதல் அலையில் சில மனித நேயமிக்க வித்தியாசமான சம்பவம் நடந்தது போலவே, இந்த முறையும் மனதை நெக்குருகச் செய்யும் சில சம்பங்களும் அரங்கேறி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. 

அதன் படி, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 85 வயதான நாராயண ராவ் என்பவர், கொரோனாவல் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அந்த பகுதியில் ஏராளானமானோர் ஒரோ நேரத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதால், குறிப்பிட்ட அந்த அரசு மருத்துவமனையில் போதுமான படுக்கை வசதிகள் இல்லாமல், பற்றக்குறை ஏற்பட்டதாகத் தெரிகிறது. அப்படியான பற்றக்குறை ஏற்பட்டு, பல காத்திருப்புக்கு பிறகுதான், சம்மந்தப்பட்ட 85 வயதான பவுராவ் தபட்கருக்கு, கொரோனாவுக்கு சிகிச்சை பெற அந்த மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைத்திருக்கிறது.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த புதிதாகத் திருமணம் ஆன ஆண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதே இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவருக்கு சிகிச்சைக்கு தேவையான படுக்கை வசதி இல்லாத காரணத்தால், அந்த படுக்கை வசதி கிடைக்கவில்லை. 

இதன் காரணமாக, பாதிக்கப்பட்டவரின் மனைவி அங்குள்ள அரச மருத்துவரிடம் மன்றாடி, தனது கணவருக்குப் படுக்கை வசதி தரும்படி கெஞ்சி இருக்கிறார். 

ஆனால், அங்கு போதுமான படுக்கை வசதிகள் இல்லாத காரணத்தால், மருத்துவர்களால் அதனை செய்துகொடுக்க முடியவில்லை.

இதனை அங்கிருந்தபடியே 85 வயதான நாராயண ராவ் கவனித்துக்கொண்டு இருந்து உள்ளார். பின்னர், அவர் நன்றாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்.

அதன் தொடர்ச்சியாக, தனது படுக்கையில் இருந்து எழுந்து மருத்துவரிடம் சென்ற அந்த 85 வயதான முதியவர், “என்னுடைய படுக்கையை அந்தப் பெண்ணின் கணவருக்கு கொடுங்கள்” என்று, அவர் கூறியிருக்கிறார். 

ஆனால், இது அந்த முதியவரின் உயிருக்கு ஆபத்தாக முடியும் என்பதால், மருத்துவர்கள் இதற்கு மறுத்து விட்டனர். ஆனாலும், 85 வயதான நாராயணோ தனது முடிவில் விடா பிடியாக இருந்தார். 

அப்போது, எல்லோர் முன்னிலையிலும் மருத்துவரிடம் கூறிய அந்த முதியவர், “நான், என்னுயை இத்தனை ஆண்டுக்கால வாழ்க்கையை முழுவதுமாக வாழ்ந்து விட்டேன். இனி நான் என்ன வாழ்ந்துவிடப் போகிறேன். எனது மருத்துவமனை படுக்கையை தேவைப்படுபவர்களுக்குத் தருகிறேன்” என்று கூறி, அதனை அப்படியே கடிதமாக எழுதிக் கொடுத்துவிட்டு, மருத்துவமனையில் இருந்து வெளியேறி வீட்டில் தங்கியபடியே சிகிச்சை பெற்று வந்தார். 

ஆனால், 85 வயதான அந்த முதியவரான நாராயண ராவ், துரதிருஷ்டவசமாக வீட்டிற்குச் சென்ற 3 நாட்களுக்குள் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். 85 வயதான நாராயண ராவின் இந்தத் தன்னலமற்ற உயிர்த் தியாகம், பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.