விஜய் டிவி,சன் டிவி உள்ளிட்ட சேனல்களில் தொகுப்பாளராகவும்,நடன கலைஞராகவும்,நடிகையாகவும் இருந்து வந்தவர் ஐஸ்வர்யா பிரபாகரன்.விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1 தொடரில் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்று வந்த சீசனில் இவரும் பங்கேற்று அசத்தி இருந்தார்.தொடர்ந்து விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளிலும் கெஸ்ட் ஆக பங்கேற்று வந்தார் ஐஸ்வர்யா.

இதனை தொடர்ந்து இவர் சன் டிவியில் இணைந்தார்.சன் டிவியின் முக்கிய தொகுப்பாளர்களில் ஒருவராக மாறினார்.சன் டிவியின் பிரபல தொகுப்பாளராக அனைவரும் பரிச்சயமானவர் ஐஸ்வர்யா பிரபாகரன்.சன் டிவியில் ஒளிபரப்பான பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளையும்,பல விருது விழாக்களையும் தொகுத்து வழங்கி மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் ஐஸ்வர்யா.

பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த ஐஸ்வர்யா, அவ்வப்போது சீரியல்களிலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.விஜய் டிவியின் 7C,மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பான மஹாபாரதம்,பைரவி உள்ளிட்ட தொடர்களிலும் நடித்து அசத்தியிருந்தார்.திருமணத்திற்கு பின் தனது குடும்பத்தினரை கவனித்து கொள்வதில் பிஸி ஆகி விட்டார் ஐஸ்வர்யா.

தொலைக்காட்சியில் தோன்றாவிட்டாலும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் டச்சில் இருப்பார் ஐஸ்வர்யா.அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வந்தார் ஐஸ்வர்யா.தற்போது தனது ட்ரான்ஸ்பர்மேஷன் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.இதனை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

View this post on Instagram

A post shared by ~íce~ (@ice_prabakar)