பரபரப்பாக நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 10 வருடங்களுக்குப் பிறகு ஆட்சியை பிடித்துள்ளது திராவிட முன்னேற்ற கழக கூட்டணி. முதல் முறையாக முதல் அமைச்சராக பதவி ஏற்கிறார் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள். 

பல பிரபலங்களும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில் இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில்  புதிய முதலமைச்சராக திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்கிறார்,உடன் அவரது அமைச்சர்களும் பதவி ஏற்கும் நிலையில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சூர்யா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் 

அந்த பதிவில்,

“இன்று பதவி ஏற்கும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் அமைச்சர் பெருமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் “

என்று பதிவிட்டு உடன் ஒரு அறிக்கையும்  இணைத்துள்ளார்

“முடியுமா நம்மால்?” என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம்...            “முடித்தே தீருவோம்!” என்பது வெற்றிக்கான தொடக்கம்...  

என்ற முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் வரிகளோடு தொடங்கும் அந்த அறிக்கையில், 

“முடிந்தே தீர வேண்டிய” பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று “மக்களின் முதல்வராக” பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.                                                                   

சுவாசிப்பதற்கு “உயிர் காற்று” கூட கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகிற இந்த பேரிடர் காலத்தில், நீங்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது. தங்கள் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி அடையும் என்று நம்புகிறோம் தங்களுக்கும் ஆற்றலும் அனுபவமும் நிறைந்த மாண்புமிகு தமிழக  அமைச்சர் பெருமக்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். 

தமிழகத்தின் உரிமைகளை மீட்க தமிழர்களின் ஒருமித்த குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும் அன்புடன் “சூர்யா” 

என தெரிவித்துள்ளார்.