இந்தியாவில் கொரோனாவின் 3 ஆம் அலையைத் தவிர்ப்பது மிக கடினம்” என்று, மத்திய அரசின் முதன்மை விஞ்ஞான ஆலோசகர் இப்போதே எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

இந்தியாவில் தற்போது வீசிக்கொண்டு உள்ள கொரோனாவின் 2 ஆம் அலையின் தினசரி பாதிப்பான இந்தியாவை நிலைகுலையச் செய்து உள்ளது. இப்படியான நிலையில் இந்தியாவில் தற்போது நிலவி வரும் இந்த 2 ஆம் அலையில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 4.12 லட்சம் பேருக்கு புதிதாகக் கொரோனா வைரஸ் தொற்று பரவி இருக்கிறது.

உயிரிழப்பு எண்ணிக்கையான எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சம் கடந்த 24 மணி நேரத்தில் 3,980 ஆக உயர்ந்திருக்கிறது.

அத்துடன் மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, உ.பி. உட்பட 12 மாநிலங்களில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா சிகிச்சையில் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கம் தமிழ்நாட்டிலும் மிக பயங்கரமாக இருக்கிறது.

இப்படியா, இந்தியாவில் கொரோனாவின் 2 வது அலையையே தாக்குப் பிடிக்க முடியாமல் பொது மக்கள் திண்டாடி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனாவின் 3 வது அலை தவிர்க்கவே முடியாது என்று, மத்திய அரசின் முதன்மை விஞ்ஞான ஆலோசகர் இப்போதே எச்சரிக்கை விடுத்து உள்ளது நாட்டு மக்களை கடும் பீதியில் ஆழ்த்தி உள்ளது.

இது தொடர்பாக பேசிய என மத்திய அரசின் முதன்மை விஞ்ஞான ஆலோசகர் விஜயராகவன், “பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் நீடிக்கும் நிலையில், 3 ஆம் அலையும் தொடர வாய்ப்பு உள்ளதாக” குறிப்பிட்டு உள்ளார். 

“இந்தியாவில் இதனைத் தவிர்ப்பது மிக கடினம்” என்றும், அவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார். 

“3 ஆம் ஆலையை எதிர்கொள்ள இந்திய மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும்” விஜயராகவன், முன்னசரிக்கையாக தெரிவித்து உள்ளார்.

முக்கியமாக, இந்த கொரோனாவின் 3 ஆம் அலையானது, குழந்தைகளையே அதிகம் பாதிக்கும்” என்றும், செய்திகள் வெளியாகி உள்ளன.

அதே போல், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் லவ் அகர்வால், “சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக” குறிப்பிட்டார். 

“கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு, ஹரியானா மாநிலத்தின் குருகிராம் ஆகிய இடங்களிலும் கொரோனா தொற்று தீவிரத்துடன் பரவுவதாகவும்” அவர் கவலைத் தெரிவித்து உள்ளார். 

இதனிடையே, “கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் இறப்பும் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் முழு பொது முடக்கம் ஒன்றே தீர்வு” என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.

மேலும், “இந்தியா முழுவதும் உடனடியாக பொது முடக்கம் போட வேண்டும்” என்று, உலக சுகாதார நிறுவனமும், அமெரிக்கா விஞ்ஞானிகளும், இந்தியாவை வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.