தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கதாநாயகனாக இருக்கும் தனுஷ் தமிழ் சினிமாவை தாண்டி இந்திய சினிமா உலக சினிமா என உயர்ந்துவிட்டார் . துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான நடிகர் தனுஷ் ஆரம்ப காலத்தில் அவருடைய உருவத்திற்காக அதிகமாக கேலி செய்யப்பட்டார். ஆனால் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் வந்த காதல் கொண்டேன் திரைப்படம் மூலமாக ரசிகர்களின் கவனம் ஈர்த்த நடிகர் தனுஷ்.

அடுத்து வெளிவந்த திருடா திருடி படத்தின்  வெற்றியால் கமர்சியல் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தார்.செல்வராகவன் இயக்கத்தில் 2006ஆம் ஆண்டு நடித்து வெளிவந்த புதுப்பேட்டை திரைப்படம் அந்த சமயத்தில் மிகுந்த வரவேற்பை பெறாவிட்டாலும்  சில வருடங்களுக்குப் பிறகு புதுப்பேட்டை திரைப்படம் பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றும் புதுப்பேட்டை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். 2011ஆம் ஆண்டு வெற்றிமாறனுடன் இணைந்து ஆடுகளம் திரைப்படத்தில் நடித்த தனுஷ் தேசிய விருதும் பெற்றார். இந்தியாவில் மிகக்குறைந்த வயதில் தேசிய விருது பெறும் நடிகராக அறியப்பட்டார். 

தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் மயக்கம் என்ன திரைப்படத்தில் நடித்த தனுஷ் 2013 ஆம் ஆண்டு வெளியான ராஞ்சனா திரைப்படத்தின் மூலமாக பாலிவுட் சினிமாவில் நுழைந்தார். தொடர்ந்து அங்கே ஷமிதாப் திரைப்படத்திலும் நடித்தார். தமிழில் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்த தனுஷ்   தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் ஃபக்கிர்  திரைப்படத்தால் முதல் முறையாக ஹாலிவுட் சென்றார். பிறகு மீண்டும் வெற்றிமாறனுடன் இணைந்து வடசென்னை,அசுரன் ஆகிய திரைப்படங்களில் பணியாற்றிய தனுஷிற்கு அசுரன் திரைப்படத்திற்காக இரண்டாவது முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.கடைசியாக தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியாகி  மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் காதல் கொண்டேன் திரைப்படம் ஆரம்பமான  சுவாரஸ்யமான நினைவுகளையும் அதன் படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் 

அடுத்து இவரது நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் திரைப்படம் வெளிவர உள்ள நிலையில்  மார்வெல் ஸ்டுடியோஸ்ஏ-ன் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் திரைப்படத்தை இயக்கிய அந்தோணி ரூஸோ ஜோ ரூஸோ இயக்குனர்களின் புதிய திரைப்படமான தி க்ரே மேன் திரைப்படம் மூலமாக மீண்டும் ஹாலிவுட் சென்று இருக்கிறார் நடிகர் தனுஷ்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dhanush (@dhanushkraja)