இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் உதவி இயக்குனராக தனது பயணத்தை ஆரம்பித்த இயக்குனர் திரு.கே.பாக்யராஜ் அவர்கள் ,இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த சிவப்பு ரோஜாக்கள் திரைப்படத்தின் மூலம் திரைக்கதை ஆசிரியராகவும்  வளர்ந்து பின்பு சுவரில்லா சித்திரங்கள் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக உருவெடுத்தார். 

தொடர்ந்து இன்று போய் நாளை வா, அந்த7நாட்கள் ,தூரல்நின்னுபோச்சி, டார்லிங் டார்லிங் டார்லிங் , முந்தானைமுடிச்சு என பல வெற்றிப் படங்களை கொடுத்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தார். திரைக்கதை எழுதுவதில் இயக்குனர் பாக்கியராஜ் அவர்களுக்கு இணையாக யாரும் இல்லை என்று தமிழ் சினிமாவில் பேசும் அளவிற்கு பாக்கியராஜின் திரைக்கதைகள் அனைவராலும் ரசிக்கப்பட்டது. 

இந்த நிலையில்  நோய் அறிகுறிகள் தென்பட்ட காரணத்தினால் கொரோனா பரிசோதனை செய்து கொண்ட திரு.கே.பாக்யராஜ் அவர்களுக்கும் திரு.பூர்ணிமா பாக்யராஜ் அவர்களுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியை பாக்கியராஜ் அவர்களின் மகன் நடிகர் சாந்தனு அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அந்த செய்தியில் ,

“எனது பெற்றோர்கள்  திரு.பாக்யராஜ் மற்றும் திருமதி.பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும்  இன்று கொரானா தொற்று உறுதியானது இதனால் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி எனது பெற்றோரும் வீட்டில் இருக்கும் மற்ற வேலைக்காரர்களும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். எனவே கடந்த 10 நாட்களில்   உங்களோடு நேரடி தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது  அனைவரும் விரைவில் குணமடைய பிராத்தனை  செய்யுங்கள்” 

என பதிவு செய்துள்ளார்

முன்னதாக தமிழ் சினிமாவில் பல பிரபலங்களும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி  வருவதை நம்மால் காண முடிகிறது. சமீபத்தில் பல முன்னணி பிரபலங்களும்  பாதிக்கப்பட்டு உயிரிழந்த செய்தியும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகவும் திரைக்கதை ஜாம்பவான் ஆகவும் இருக்கும் திரு கே பாக்யராஜ் அவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.