“எங்கள அவன் கெடுத்துட்டான்” என்று, கூட்டமாக சேர்ந்து சில பெண்கள் புகார் அளித்ததால், “இது பொய்யான புகார்” என்று, சம்மந்தப்பட்ட காப்பீட்டு முகவர் போலீசாரிடம் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் நம்பாத நிலையில், ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எப்போதும் போலவே குற்றங்களுக்குப் பெயர் போன உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் தான், இந்த அதிர்ச்சி சம்பவமும் அரங்கேறி இருக்கிறது.

உத்திரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ள கவாஸ் புரா என்னும் பகுதியைச் சேர்ந்த லாவிஷ் அகர்வால் என்ற இளைஞர், அதே பகுதியில் காப்பீட்டு முகவராக பணிபுரிந்து வருகிறார்.

காப்பீட்டு முகவரான லாவிஷ் அகர்வால், சமீபத்தில் சீதாப்பூர் சென்றதாகவும், அங்கு வைத்து சில பெண்களை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அந்த பகுதியைச் சேர்ந்த சில பெண்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

அத்துடன், அந்த பகுதியைச் சேர்ந்த சில இளம் பெண்களை ஈவ் டீசிங் செய்ததாகவும், காப்பீட்டு முகவரான லாவிஷ் அகர்வால் மீது வேறு சில பெண்களும் குற்றம் சாட்டி உள்ளனர்.

இது தொடர்பாக குற்றம்சாட்டிய அந்த பெண்கள், அங்குள்ள சீதாப்பூர் காவல் நிலையத்தில் காப்பீட்டு முகவரான லாவிஷ் அகர்வால் மீது புகார் அளித்தனர்.

இதனால், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், லாவிஷ் அகர்வாலை மீது வழக்குப் பதிவு செய்திருப்பதாக கூறி, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தங்களது பாணியில் விசாரித்து உள்ளனர்.

இந்த விசாரணையில், போலீசார் முன்பு “நான் எந்த குற்றமும் செய்யவில்லை என்றும், என் மீது வேண்டும் என்றே இந்த பெண்கள் பொய் புகார் கொடுப்பதாகவும்” லாவிஷ் அகர்வால் கூறியிருக்கிறார்.

ஆனால், போலீசார் லாவிஷ் அகர்வால் கூறுவதை நம்ப மறுத்து அவர் பொய் சொல்வதாகவும் கூறி உள்ளனர்.

இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான லாவிஷ் அகர்வால், கடந்த 30 ஆம் தேதி செவ்வாய் கிழமையன்று தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். 

அப்போது, தனது தற்கொலையை முயற்சியை தன்னுடைய ஃபேஸ்புக்கில் லைவ் செய்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டு, கண்ணீர் விட்டு அழுத படியே பேசிய அந்த இளைஞர், “எனக்கும் இந்த பெண்கள் கொடுத்திருக்கும் பாலியல் பலாத்கார புகாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், அவர்கள் வசிக்கும் சீதாப்பூருக்கு தான் இது வரை சென்றதே இல்லை” என்றும், அவர் கூறியிருக்கிறார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞனின் குடும்பத்தினர், அவரை உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர், தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிரமாகத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த வீடியோவை முழுவதுமாக பார்த்த போலீசார், தற்போது புகார் அளித்த பெண்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.