காரில் குடித்து கும்மாளம் அடித்த பெண்கள் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஆந்திரா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஆந்திரா மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதனால், அந்த மாநில மக்கள் பலரும் கடும் அதிர்ப்தி தெரிவித்துள்ளனர்.

அந்த வீடியோவில், சீறிப்பாய்ந்து சென்ற கார் ஒன்று, கொஞ்சம் தூரம் சென்றதும் சாலை ஓரமாக நிற்கிறது. அப்போது, அந்த காரில் 4 க்கும் மேற்பட்ட பெண்கள் இருக்கிறார்கள். 

கார் குறிப்பிட்ட ஒரு இடத்தில் வந்து நின்றதும், அந்த காரின் கதவை திறந்து விட்டு அந்த பெண்கள், கையில் சரக்கு பாட்டிலை வைத்து ஓபன் செய்துகொண்டு இருக்கிறார்கள். அதில், ஒரு சில பெண்கள் அந்த மது பாட்டிலைக் கையில் வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக, மற்றொரு பெண் கடையில் வாங்கி வந்திருந்த சிக்கன், மட்டன் என்று சில பல ஐட்டங்களை அந்த வீடியோவில் காட்டி காட்டி எடுத்து சாப்பிடுகிறார்.

அத்துடன், போதையின் உச்சத்தில் இருந்த அந்த பெண்கள், வீடியோவுக்கு மாறி மாறி போஸ் கொடுக்க, அதனை மற்றொருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துகொண்டு இருக்கிறார். 

அப்போது, அந்த காரில் அந்த பெண்களுடன் பயணித்த ஆண் நண்பர்கள், அந்த காரின் வெளியே நின்று மது அருந்துகிறார்கள். 

மேலும், மது அருந்தும் அந்த கிளாஸ்களில் மது, சோடா, தண்ணீர் ஊற்றி சியர்ஸ் சொல்லி குடித்துவிட்டு, சிக்கன், மட்டனை எடுத்து சாப்பிடுகிறார்கள். 

இப்படியாக, கடும் மது போதையில் இருந்த அந்த பெண்கள், போதையின் காரணமாக மிகுந்த உற்சாகத்தில் “என்ன செய்கிறோம்?” என்பது கூட தெரியாமல், அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளனர்.

இந்த வீடியோவானது, ஆந்திரா மாநிலம் முழுவதும் பரவி உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும், எதிர்மறையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

அத்துடன், இந்த வீடியோ போலீசாரின் கவனத்திற்குச் சென்ற நிலையில், குடிபோதையில் கும்மாளம் அடித்த அந்த பெண்கள் ஆந்திராவில் எங்கு இருக்கிறார்கள் என்று போலீசாரும் தீவிரமாகத் தேட ஆரம்பித்து உள்ளனர்.

குறிப்பாக, காரில் இருந்த அனைத்து பெண்களும், மது அருந்துவதால் காரை ஓட்டிக்கொண்டு வந்தது யார்?, போதையில் காரை ஓட்டிக்கொண்டு சென்றார்களா?” என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம், ஆந்திராவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது, அந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.