தமிழ் திரையுலகில் மக்களின் ஆதர்ஷ நடிகர்களில் ஒருவர் நடிகர் கார்த்தி. தனது ஒவ்வொரு திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தி வரும் நடிகர் கார்த்தி கதை தேர்வில் மிகவும் சிறந்து செயல்பட்டு வருகிறார். கார்த்தி கைவசம் பொன்னியின் செல்வன் படம் உள்ளது. மணிரத்னம் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. 

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் கார்த்தி, சென்னை அரசுப்பேருந்தில் தனது நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். சென்னை மக்களின் நம்பத்தக்க நண்பன் பல்லவன். என் கல்லூரி நாட்களில் அதிகம் பல்லவன் பேருந்தில் செலவழித்திருத்தேன் என்று கார்த்தி பதிவவிட்டது அதிக லைக்ஸ்களைக் குவித்தது.

அதன் பிறகு தனது குழந்தைப் பருவ புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். குழந்தை பருவத்தில் எனக்கு மிகவும் பிடித்த உடை இதுதான். எப்போதெல்லாம் ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியில் பில்லா படத்தின் ‘மை நேம் இஸ் பில்லா ’ பாடல் ஒளிபரப்பாகுமோ அப்போது டெனிம் ஜாக்கெட்டையும், இந்த பேன்டையும் ஸ்டைலாக அணிந்து கொள்வேன் என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் அவரது சொந்த ஊரில் புளிய மரத்தில் தொங்கியபடி வீடியோவை வெளியிட்டுள்ளார். சிறுவயதிலிருந்தே இதில் தொங்க முயற்சி செய்வதாக குறிப்பிட்டுள்ளார். கார்த்தியின் இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான கார்த்தியின் கைதி திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்திருக்கும் நிலையில் ரெமோ புகழ் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருக்கும் சுல்தான் ஏப்ரல் 2-ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karthi Sivakumar (@karthi_offl)