சிறந்த இலக்கிய எழுத்தாளர்களுக்கு இந்திய அரசால் தேசிய அளவிலும் மாநில அளவிலும்  ஆண்டுதோறும் வழங்கப்படும், சாகித்திய அகாதமி விருது இந்த வருடம் தமிழ் எழுத்தாளர் இமையத்திற்கு கிடைத்துள்ளது. 

’செல்லாத பணம்’ நாவலுக்காக, தமிழ் எழுத்தாளர் இமையத்திற்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசுத்தொகையாக 1,00,000 ரூபாயும், ஒரு தாமிர பட்டயமும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவரும் இமையம், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

1994ல் இமையத்தின் முதல் நாவல் வெளியானது. கோவேறு கழுதைகள் என்ற அந்த நாவல் தமிழ் இலக்கிய உலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும், 'எங் கதெ', 'செடல்','ஆறுமுகம்', 'மண் பாரம்', 'கொலைச்சேவல்', சாவு சோறு',  'நன்மாறன் கோட்டைக் கதை' ஆகிய நூல்களையும் இமையம் எழுதியுள்ளார்.