2020 ஆம் ஆண்டில் “சுஷாந்த் சிங் முதல் சித்ரா வரை” இந்திய சினிமா உலகில் உயிரிழந்த நடிகர், நடிகைகளின் பட்டியலைப் பார்க்கலாம்.

இந்திய சினிமா பல அற்புதமான சினிமா கலைஞர்களை இந்த 2020 ஆம் ஆண்டில் பறிகொடுத்து, ரசிக பெருமக்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

2020 ஆம் ஆண்டு இன்றுடன் முடிய உள்ள நிலையில், இந்த ஆண்டில் உயிரிழந்த சினிமா கலைஞர்களை ஒரு முறை நினைவு கூர்வது, நாம் அவர்களுக்குச் செய்யும் அஞ்சலியாக இருக்கட்டும். 

சுஷாந்த் சிங்

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறப்பை யாராலும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. சுஷாந்த் சிங், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவ்வளவு சர்ச்சைகள். பல விதமான மர்மங்கள். இன்னும் அந்த மர்ம முடிச்சுக்கள் விலகவே இல்லை. அவர் இறந்த செய்தி கேட்டு, சில ரசிகைகள் கூட தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுகளும் நடந்தது. சுஷாந்த் சிங் மறைவுக்குப் பிரதமர் மோடி உள்பட நாட்டில் பெரும்பாலான பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். 

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததன் மூலமாக நடிகர் சுஷாந்த் சிங், இந்தியா முழுமைக்கும் அறியப்பட்டார். நாடு அறிந்த புகழ்பெற்ற நடிகராக வலம் வந்தார். சுஷாந்த் சிங் இறந்த பிறகு, அவர் நடித்து கடைசியாக வெளியான “தில் பேச்சாரா” படம் அதிகமானோரால் பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
நடிகர் இர்ஃபான் கான்
 
இந்தி சினிமா உலகில் மிகவும் புகழின் உச்சத்தில் இருந்தார் பிரபல பாலிவுட் நடிகர் இர்பான்கான். இந்த கொரோனா காலத்தில், புற்றுநோயால் தாக்கப்பட்டு,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் இர்பான் கான், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், பாலிவுட் சினிமா உலகம் மட்டுமல்லாது,     
ஹாலிவுட் சினிமா உலகமும் கலங்கிப்போனது. 

அதற்கு காரணம், நடிகர் இர்ஃபான் கான், பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை பிரபலமாக வலம் வந்து புகழ் பெற்று திகழ்ந்தார். குறிப்பாக, ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட “ஜுராசிக் பார்க்”, “ஸ்பைடர்மேன்” உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்து சிறந்த நடிப்புக்கான தேசிய விருதையும் அவர் பெற்றார் என்பது நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நடிகர் இர்ஃபான் கான் மறைவு, பாலிவுட்டிற்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியா இழப்பு என்பது மட்டும் உண்மை. 

பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம்
 
பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் குரலுக்கு அடிமையாகாதவர்களே தமிழ்நாட்டில் இல்லை. தமிழ் சினிமாவில் மட்மின்றி, இந்திய சினிமாவிலேயே பாடல்களுக்கு மிகப் பெரும் அடையாளமாகப் புகழ் பெற்று திகழ்ந்தவர் தான் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இவரது கலை உலக வாழ்க்கை வெறும் பாடல்களோடு நின்று போகவில்லை. இசையமைப்பாளராக பரிமாணம் அடைந்தார். குறிப்பிட்ட சில படங்களில் நடிகராகவும் வலம் வந்தார். இப்படியாக, பன்முகத்துவம் கொண்ட இந்த மாபெரும் கலைஞன் தமிழ் உட்பட ஒட்டுமொத்த இந்திய மொழிகளில் இதுவரை பல ஆயிரம் பாடல்களைப் பாடி ரசிகர்களை தன் வசப்படுத்தியவர். இந்த கொடிய வகை கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால், அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று, அவரது மகன் சரண் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
நடிகர் ரிஷி கபூர்

இந்தி சினிமா உலகமான பாலிவுட்டின் பழம் பெரும் நடிகர்களில் மிக முக்கியமானவராக வலம் வந்தார் நடிகர் ரிஷி கபூர். ராஜ் கபூர் குடும்பத்தைச் சேர்ந்த இவர் பிரபல நடிகர் ரன்பீர் கபூரின் தந்தை ஆவார். இந்தி சினிமா உலகில் சமீப காலமாக துணை மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் மட்டும் அவர் நடித்து வந்த நிலையில், இந்த கொரோனா காலத்தில் அவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால், அவர் உயிரிழந்தார்.

நடிகர் சிரஞ்சீவி சர்ஜா
 
கன்னட சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வந்தார் சிரஞ்சீவி சர்ஜா. மிகவும் புகழ் பெற்று திகழ்ந்தார். கன்னட திரையுலகில் கடந்த 10 ஆண்டுகளில் 20 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துப் புகழ் பெற்று திகழ்ந்துாபது, நடிகை மேக்னா ராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த கொரோனா காலத்தில், திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் சிரஞ்சீவி சர்ஜா பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், கன்னட திரையுலகினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

நடிகர் வடிவேல் பாலாஜி
 
சினிமாவில் இருந்து புகழ் பொற்றை தாண்டி, தமிழகத்தின் பிரபல தனியார் தொலைக்காட்சியின் மூலம் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர் நடிகர் வடிவேல் பாலாஜி. தனியார் தொலைக்காட்சியில் வரும் நகைச்சுவை நிகழ்ச்சிகளால், தமிழகத்தின் ஒட்டுமொத்த ரசிகர்களையும், தன் பக்கம் ஈர்த்தவர். நடிகர் வடிவேலுவைப் போலவே அவரது பாவனைகள் இருப்பதால், மற்ற ரசிகர்களால் பெரும் கவனிக்கப்பட்டார். நடிகர் வடிவேல் பாலாஜி, நடிகர் வடிவேல் போலவே வேடமிட்டு இவர் செய்யும் நகைச்சுவைகளை அப்படியே நடித்து காட்டுவார். இந்த கொரோனா காலத்தில் பலரும் மன இருக்கத்தில் இருந்தபோது பலரை சிரிக்க வைத்துக்கொண்டே இருந்த அவர், திடீரென்று மாரடைப்பால் தனது 45 வது வயதில் நம்மை அழ வைத்து சென்றுவிட்டார். இது தமிழ் ரசிகர்களுக்கு பெரும் இழப்பு தான்.
 
நடிகர் தவசி

கிராமத்தான் வேடத்தை ஏற்று நடிப்பதில் மிகவும் வல்லவர் நடிகர் தவசி. தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் பட்டைய கிளப்பி பிரபலமாக வலம் வந்தார் நடிகர் தவசி. தனது இயல்பான நடிப்பால் நகைச்சுவையிலும் அசத்தி வந்தார். “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” உள்ளிட்ட படங்களில் இவரது காமெடி பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இந்த கொரோனா காலத்தில், புற்று நோயால் பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சைகூட பணம் இல்லாமல், பண உதவி கேட்டு வீடியோவும் வெளியிட்டு இருந்தார். இவருக்கு உதவி செய்ய தமிழ் சினிமாவின் பல நடிகர்கள் முன்வந்த போதிலும், சிகிச்சை பலனின்றி நடிகர் தவசி பரிதாபமாக உயிரிழந்தார். 
 
நடிகை சித்ரா
 
நடிகை சித்ராவின் நடிப்பை டி.வி.யில் பார்த்தவர்கள், இந்த பெண் போலவே தனக்கும் மருமகள் வேண்டும் என்று ஏங்காத தாய் குலங்கள் இருக்க முடியாது. தனது அழகான பேச்சால், நடிப்பால், வசிகரமான தோற்றதால், இளைஞர்கள் கூட தனக்கு நடிகை சித்ராவை போன்று தான் மனைவி வேண்டும் என்று கேட்கும் அளவுக்கு, சீரியலில் புகழின் உச்சத்தில் இருந்தார். நடிகை சித்ராவின் திறமையான நடிப்புக்கும், குறும்பான டிக்டாக் வீடியோக்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உண்டு. நடிகர் சித்ரா, ரகசிய திருமணம் செய்யக்கொண்டாலும், முறைப்படியான திருமணத்திற்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்த நிலையில், இவர் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது, ஒட்டுமொத்த ரசிகர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இது தொடர்பான  விசாரணை தற்போது வரை நடைபெற்றுக்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.