மதுரை முழுவதும் ரஜினியின் இலட்சியத்தை விஜய் நிறைவேற்றுவார் என்று விஜய் ரசிகர்களால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கிறது. 


நடிகர் விஜயை அரசியலுக்கு அவரது ரசிகர் அழைத்து வருகிறார்கள். இந்நிலையில் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கபோவதில்லை என்று திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இதையொட்டி, நடிகர் விஜயின் கையைப் ரஜினி பிடிப்பது போன்ற புகைப்படத்துடன் போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்கிறது. 


மதுரை தெற்கு மாவட்ட தொண்டரணி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில், “வேண்டாம் 2026 ல் இல்லைன்னா எப்பவுமே இல்லை 'நீங்க வாங்க தம்பி இனி..' என தலைப்பிடப்பட்டுள்ளது. 'அதிசயமும் அற்புதமும் உங்களால் மட்டுமே சாத்தியம் ரஜினி சார் என்றும்  உங்க லட்சியம் நிச்சயம் விஜயால் நிறைவேறும் என்று எழுதப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்பு சீமானை கண்டித்து ஒரு போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். இப்போது மீண்டும் ஒரு போஸ்டரை ஒட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.