இந்தியாவில் கொரோனா 3 ஆம் ஆலை அதி தீவிரமாக பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்னும் என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என்பது குறித்து, பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.

இந்தியாவில் கொரோனா 3 அலையானது, கோரத் தாண்டம் ஆடி வருகிறது. இதனால், நாடு முழுவதும் தற்போது 5 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்ச பெற்று வருகின்றனர்.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றானது கடந்த 24 மணி நேரத்தில் 15 லட்சத்து 63 ஆயிரத்து 566 பேர் கொரோனா பரிசோதனை செய்தனர் என்றும், அவர்களில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 632 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது” என்றும், தெரிவித்து உள்ளது. 

இதனால், “நாட்டில் தற்போது கொரேனாா சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கையானது 5 லட்சத்து 90 ஆயிரத்து 611 ஆக உயர்ந்திருக்கிறது” என்றும், கூறப்பட்டுள்ளது.

அத்துடன், “கொரோனா நோய் தொற்றிலிருந்து 40 ஆயிரத்து 863 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், 327 பேர் உயிரிழந்து உள்ளனர்” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதனால், “இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 4 லட்சத்து 83 ஆயிரத்து 790 ஆக அதிகரித்திருப்பதாகவும்” கூறப்பட்டு உள்ளது.

இப்படியாக, இந்தியாவில் 4 வது நாளாக தொடர்ந்து ஒரு லட்சத்தை தாண்டி கொரேனாா பதிப்பு பதிவாகி உள்ளது.

அந்த வகையில், தலைநகர் டெல்லி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் என இந்யாவின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்கனவே பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தான் வருகின்றன. எனினும், இந்த கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை.

அதுவும்  இந்தியாவில் தினமும் ஒரு லட்சத்துக்கு அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது. இப்படி, பரவும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளையும், பகுதி நேர ஊரடங்குகளும் தொடர்ச்சியாக அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து தான் வருகின்றன. அந்த வகையில், தமிழகத்திலும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, நடைமுறையில் உள்ளன. 

என்றாலும், இந்தியா முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியிருப்பதால், பிரதமர் மோடி இன்று கொரோனா  பாதிப்பு நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். 

அதன்படி, இன்று மாலை 4.30 மணி அளவில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றும், மத்திய அரசு  வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால், நாடு முழுவதும், ஊரடங்கு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இன்னும் கடுமையாக்கப்படும் என்றே கூறப்படுகிறது.