மக்கள் தங்கள் கவலைகளை மறந்து ஒரு படத்தினை கொண்டாடும் இடம் தான் திரையரங்கம்.பலரும் வீட்டில் தனியாக படம் பார்ப்பதை விட தங்கள் நண்பர்களுடன் குடும்பத்துடன் பெரிய திரையில் படம் பார்த்து ரசிக்கவே விரும்புவார்கள்.அப்படி ஒவ்வொரு திரையரங்குடனும் ஒவ்வொரு ரசிகருக்கு ஒரு அழகான நினைவு இருக்கும்.

பல ஊர்களின் அடையாளமாக சில திரையரங்குகள் விளங்கி வரும்,அந்த திரையரங்குகளில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால் அந்த இடமே திருவிழா கோலம் கொள்ளும்.பல புதிய தொழிநுட்பங்கள் வந்தாலும் சில திரையரங்குகள் ரசிகர்களின் கொண்டதிற்காகவே இருக்கும்.

மதுரையின் புகழ்பெற்ற திரையரங்கங்களில் ஒன்றாக திகழ்ந்து வந்தது அபிராமி அம்பிகை திரையரங்கம்.நவீன திரையரங்கமாக மாற்றப்படாவிட்டாலும் ரசிகர்கள் தொடர்ந்து இந்த திரையரங்கிற்கு வந்து படம் பார்த்து வந்தனர்.பல வருடங்களாக இருக்கும் இந்த திரையரங்கில் பல படங்களின் 200,300 நாட்களை கடந்து வெள்ளிவிழா கண்டுள்ளது.

கொரோனா காரணமாக நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக சில திரையரங்குகள் மூடப்பட்டு வருகின்றன.அப்படி மதுரை மக்களின் மனம் கவர்ந்த அந்த ஏரியாவின் அடையாளமாக இருந்து வந்த அபிராமி அம்பிகை திரையரங்கம்,சில நாட்களுக்கு முன் இடிக்கப்பட்டுள்ளது.இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.பல ரசிகர்களும் இந்த திரையரங்குடன் தங்கள் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.