தமிழ் திரையுலகின் பிரபல கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள திரைப்படம் மோகன்தாஸ். முன்னதாக இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்து ஹிட்டான ராட்சசன் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது தயாராகி வரும் மோகன்தாஸ் திரைப்படமும் சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக தயாராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரபல மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் மோகன்தாஸ் படத்தில் விஷ்ணு விஷால் உடன் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்ததாக ரிலீஸாகவுள்ளது F.I.R திரைப்படம். இயக்குனர் மனு ஆனந்த் F.I.R திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

விஷ்ணு விஷாலின் VV ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள F.I.R படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் மற்றும் ரெபா மோனிகா ஜான் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். F.I.R திரைப்படம் தமிழ் & தெலுங்கில், அடுத்த ஆண்டு (2022) பிப்ரவரியில் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், 

2022 பாசிட்டிவ் ரிசல்ட் உடன் தொடங்கியுள்ளது. 
ஆமாம் மக்களே எனக்கு கோவிட் பாசிட்டிவ்…
கடந்த வாரத்தில் என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும் 
பயங்கரமான உடல்வலி, மூக்கடைப்பு, தொண்டையில் கரகரப்பு மற்றும் லேசான காய்ச்சலும் இருக்கிறது .விரைவில் மீண்டு வருவேன்!
 

என தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் விஷ்ணு விஷால் விரைவில் மீண்டு வர கலாட்டா குழுமம் சார்பாக வேண்டிக்கொள்கிறோம்.