தமிழ் திரை உலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகராகவும் திகழும் நடிகர் சீயான் விக்ரம் அடுத்ததாக ஸ்டுடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா தயாரிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

முன்னதாக பிரம்மாண்ட பொருட்செலவில் இந்திய சினிமா ரசிகர்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கும் இயக்குனர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் எனும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் பலவிதமான கெட்டப்புகளில் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படமும் விரைவில் ரிலீஸாக தயாராகி வருகிறது.

இதனிடையே இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள மகான் திரைப்படம் வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக ரிலீசாகிறது. இன்று (ஜனவரி 31ஆம் தேதி) வெளியான மகான் படத்தின் டீசரும் அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் நடிகர் சீயான் விக்ரம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திரசிங் தோனியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது சீயான் விக்ரம் மற்றும் தல தோனி இருவரும் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் கி வருகின்றன அந்த புகைப்படங்கள் இதோ…