“டேட்டிங் ஆப்பில் பெண் கிடைப்பாள்” என்கிற யுத்தியில், இளைஞன் ஒருவன் தனது முழு தகவலையும் வெளியிட்டு வாடகைக்கு வீடு கேட்ட நிகழ்வு, இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

“காதல் போய், லிவ் -இன் வந்தது. காதல் போய் டேட்டிங் வந்தது” என்று சொன்னால், அது தகும்.

இந்தியாவிற்கு சமீப காலமாக அறிமுகம் ஆன ஒரு கலாச்சாரம் தான் டேட்டிங்! ஆனால், இந்த கலாச்சாரம் இந்தியாவின் சில பகுதிகளில் நீண்ட ஆண்டுகளாக இருந்தாலும், “டேட்டிங்” என்ற பெயர், அதற்கு புதிதாக தற்போது தான் வந்து சேர்ந்திருக்கிறது. 

ஆனால், டேட்டிங் என்கிற பெயரில் இங்கு எல்லை மீறும் சம்பவங்கள் அதிகம். அவ்வளவு ஏன், நமக்கான ஜோடியை தேடி அதற்கு என்று இங்கு “டேட்டிங் ஆப்” ஒன்றும் இணையத்தில் ஏராளமாக கொட்டிக்கிடக்கின்றன.

டேட்டிங் என்றால், தமிழில் “பொருத்தம் பார்த்தல்” என்பது பொருளாகும். பொதுவாக டேட்டிங் என்பது குறிப்பிட்ட தேதி மற்றும் பொது இடத்தில் ஒருவர் தனக்கு ஏற்ற துணையை தானே பொருத்தம் பார்த்து தேர்வு செய்வதற்கான ஒரு விருப்பமாக தற்போது பார்க்கிறது. ஆனால், இது தான் நடக்கிறதா என்றால், இதுவும் நடக்கிறது என்றே தான் பதில் கூற முடியும்.

அப்படியான டேட்டிங் ஆப்பில் தற்போது ஒருவர், தனது முழு விபரங்களையும் தெரிவித்து, “டேட்டிங் ஆப்பில் பெண் கிடைப்பாள்” என்கிற முன்யோசனை, இளைஞன் ஒருவன் வாடகைக்கு வீடு கேட்ட நிகழ்வு, இணையத்தில் தான், இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது, மற்ற டேட்டிங் ஆப்பை் போன்றே, bumble என்ற டேட்டிங் ஆப் ஒன்றும் தற்போது பிரபலமான ஆப்களில் ஒன்றாக இருக்கிறது.

அந்த bumble என்ற டேட்டிங் ஆப் மூலமாக, கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் “வாடகைக்கு வீடு வேண்டும்” என்று, தன்னுடைய bio ல் சில குறிப்புகளையும் வெளியிட்டு இருக்கிறார்.

கேரளா எர்ணாகுளத்தைச் சேர்ந்த சேர்ந்த அந்த இளைஞர், மும்பையில் பணியாற்றுக்கொண்டு இருக்கிறார். இந்த கேரளா இளைஞரின் டேட்டிங் ஆப் சைட்டிங்கை, சோசியல் மீடியாவில் Ana de Aamras என்ற பெயரில் உள்ள ஒருவர், தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். 

அந்த பதிவில், “எனக்கு இந்தி தெரியாது. எனவே மும்பையின் வெஸ்டர்ன் லைனில் வாடகைக்கு ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க எனக்கு உதவுங்கள்” என்று, அந்த இளைஞன் குறிப்பிட்டு உள்ளார். 

அத்துடன், “மும்பையில் உள்ள அந்தேரியில் புரோக்கர் செலவு இல்லாமல் வாடகைக்கு வீடு இருந்தால், எனக்கு யாராவது தகவல் தெரிவிக்கவும் என்றும், புரோக்கர் சார்ஜ் கேட்டாலும் தவறாக எடுத்துக்கொள்ளமாட்டேன்” என்றும், அந்த இளைஞர், சுற்றி வளைத்து, எதையோ சொல்ல வருகிறார்.

டேட்டிங் ஆப்பில், தன்னை பற்றிய முழு தவலையும் வெளிட்ட அந்த இளைஞனின் ஸ்கீரின்ஷாட்டை பார்த்த நெட்டிசன்கள் பலரும், “இது ஒரு சிறந்த யோசனை என்றும், டேட்டிங் ஆப்பில் ஒரு நாளைக்கு உங்கள் பயோவை நிறைய பேர் பார்ப்பார்கள் என்றும், அதன் மூலம் ரூம் மேட் அல்லது பிளாட் மேட்ஸ் உங்களுக்கு கிடைப்பார்கள்” என்றும், சிலர் பதிவிட்டு உள்ளனர். 

ஆனால், இன்னும் சிலரோ, உங்களுக்கு லிவ் -இன் ஆகவோ, அல்லது டேட் செய்யவோ கூட தோழிகள் கிடைப்பார்கள்” என்றும், பலரும் காமெடியாக கூறி உள்ளனர். இதனால், இந்த பதிவு தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.