தமிழ் சினிமாவின் முன்னணி கமர்சியல் இயக்குனர்களில் ஒருவராக தொடர்ந்து ரசிகர்கள் விரும்பும் ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் அடுத்த என்டர்டெய்னிங் படமாக தயாராகி வருகிறது காஃபி வித் காதல். இப்படத்தில் ஜீவா, ஜெய், DD-திவ்யதர்ஷ்னி, யோகிபாபு இணைந்து நடித்துள்ளனர்.

முன்னதாக இயக்குனர் சுந்தர்.C நடிப்பில் வல்லான், தலைநகரம் 2 மற்றும் ஒன் 2 ஒன் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன. இதனிடையே இயக்குனர் பத்ரி நாராயணன் இயக்கத்தில் இயக்குனர் சுந்தர்.C மற்றும் நடிகர் ஜெய் இணைந்து நடித்துள்ள  திரைப்படம் பட்டாம்பூச்சி.

சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக தயாராகயிருக்கும் பட்டாம்பூச்சி திரைப்படத்தை AVNI டெலி மீடியா சார்பில் நடிகை குஷ்பூ சுந்தர்.C தயாரித்துள்ளார். ஹனி ரோஸ் மற்றும் இமான் அண்ணாச்சி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசக்கி கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில் நவநீத் பட்டாம்பூச்சி படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வருகிற ஜூன் 24ஆம் தேதி பட்டாம்பூச்சி திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் பட்டாம்பூச்சி திரைப்படத்திலிருந்து புதிய SNEAK PEEK வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது. சமூகவலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ள பட்டாம்பூச்சி படத்தின் SNEAK PEEK வீடியோ இதோ…