தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் லிங்குசாமி ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பீமா, பையா, வேட்டை உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர். இருப்பினும் கடைசியாக லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த அஞ்சான் மற்றும் சண்டக்கோழி 2 ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

எனவே தான் ஒரு கமர்ஷியல் வெற்றி பட இயக்குனர் என நிரூபிக்க தனது கம்பேக் திரைப்படத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி காவல் துறை அதிகாரியாக, கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் தி வாரியர்.

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் தி வாரியர் திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, மிரட்டலான வில்லனாக நடிகர் ஆதி நடித்துள்ளார். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். தி வாரியர் திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி ரிலீஸாகவுள்ளது.  

முன்னதாக தி வாரியர் படத்தில் நடிகர் சிலம்பரசன்.TR பாடி வெளிவந்த புல்லட் பாடல் வைரல் ஹிட்டடித்த நிலையில், அடுத்த சென்சேஷனலான ஹிட் பாடலாக தி வாரியர் படத்திலிருந்து விசில் பாடல் வருகிற ஜூன் 22ஆம் தேதி மாலை 7.12 மணியளவில் வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

You heard the #BULLETSong ..

Now,It’s time for the #WHISTLESong!!

Love..#RAPO #TheWarriorr #TheWarriorrOnJuly14 pic.twitter.com/faUv7hmGQL

— RAm POthineni (@ramsayz) June 20, 2022