ஒன்றா இரண்டா இல்லை இல்லை மொத்தம் 3 மனைவிகளும் தேர்தலில் போட்டி..  3 வது மனைவி இருப்பதை மறைத்த அரசு ஊழியர் சஸ்பெண்ட்!

ஒன்றா இரண்டா இல்லை இல்லை மொத்தம் 3 மனைவிகளும் தேர்தலில் போட்டி..  3 வது மனைவி இருப்பதை மறைத்த அரசு ஊழியர் சஸ்பெண்ட்! - Daily news

3 மனைவிகளும் தேர்தலில் போட்டியிட்ட விசயத்தில், தனக்கு 3 வது மனைவி இருப்பதை மறைத்த கணவரான அரசு ஊழியர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் சிங்குரோலி மாவட்டம் கோஹ்ரா கிராம பஞ்சாயத்தில், பஞ்சாயத்து செயலாளராக சுக்ராம் சிங் என்பவர் அந்த பதவியில் இருந்து வருகிறார்.

இந்த பஞ்சாயத்து செயலாளராக உள்ள சுக்ராம் சிங்கிற்கு குஷுகலி சிங், கீதா சிங், ஊர்மிளா சிங் என்று மொத்தமாக 3 மனைவிகள் இருக்கிறார்கள்.

முன்னதாக, அந்த மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்ற போது, இதில் போட்டியிடுவோரின் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வந்தனர். 

இப்போது, “அரசு ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் யாரேனும் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுட்டால், அது தொடர்பான தகவல்களை சம்மந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்” என்கிற உத்தரவு நடைமுறையில் இருக்கிறது.

இந்த நிலையில் தான், சுக்ராம் சிங்கின் 3 மனைவிகளுமே, அந்த மாநில பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட அந்த 3 பேருமே, ஆளாளுக்கு தனித் தனியாக வேட்புமனு ஒன்றை தாக்கல் செய்தனர். 

மேலும், அரசு ஊழியரான சுக்ராம் சிங்கின் முதல் மனைவி கீதா சிங், 2 வது மனைவி ஊர்மிளா சிங் ஆகிய இருவரும் பிபர்ஹட் கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். 

ஆனால், இவர்கள் இவரும் ஒருவருக்கு ஒருவர் எதிராக களமிறங்கி வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். 

ஆனால், சுக்ராம் சிங்கின் 3 வது மனைவி ஊர்மிளா சிங், அங்குள்ள ஜன்பத் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து உறுப்பினர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, அவர் சுக்ராம் சிங் தனது மனைவிகளான கீதா சிங் மற்றும் ஊர்மிளா சிங் மட்டுமே தேர்தலில் போட்டியிடுவதாக, தனது உயர் அதிகாரிகளுக்கு எழுத்து மூலமாக தகவல் தெரிவித்து இருக்கிறார்.

இதனால், தனது 3 வது மனைவி ஊர்மிளா குறித்த எந்த ஒரு தகவலையும், இவற்றுடன் ஜன்பத் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து உறுப்பினர் தேர்தலில் போட்டியிட உள்ளார்” என்கிற தகவலையும் அவர் தனது உயர் அதிகாரிகளிடம் இருந்து முற்றிலுமாக மறைத்து உள்ளார். 

ஆனால், இது குறித்து அரசு ஊழியரான சுக்ராம் சிங்கின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்த நிலையில், இது குறித்து அரசு ஊழியரான சுக்ராம் சிங்கிடம் உயர் அதிகாரிகள் விளக்கம் கேட்டு உள்ளனர்.

ஆனால், அவர் சரிவர பதில் அளிக்கவில்லை. இது குறித்து “உரிய விளக்கம் கேட்டு, சுக்ராமிற்கு உயர் அதிகாரிகள் நோட்டீஸ் ஒன்றையும்” அனுப்பி வைத்தனர். 

ஆனால், இந்த நோட்டீசுக்கும் சுக்ரான் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. 

இதன் காரணமாக, “3 வது மனைவி தேர்தலில் போட்டியிடுவது குறித்த தகவலை மறைத்ததற்காக, கோஹ்ரா கிராம பஞ்சாயத்து செயலாளர் சுக்ராமை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளனர்.

இதனையடுத்து, அரசு ஊழியரான சுக்ராம் சிங்கி, தனக்கு 3 மனைவிகள் இருப்பதை நினைத்து சந்தோஷப்படவும் முடியாமல், 3 வது மனைவியால் வேலை பறிபோனதால் தன்னைத் தானே நொந்துக்கொண்டு வீட்டில் இருந்து வருகிறார். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment