தமிழ் சினிமாவின் நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக சிறந்த நடிகராகவும் விளங்கும் நடிகர் சூர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியப் படமாக அமைந்தது திரைப்படம் சூரரைப்போற்று இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீசாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

ஒருபுறம் கொண்டாடப்பட்டாலும் மறுபுறம் இத்திரைப்படத்தை திரையரங்குகளில் காண முடியாமல் போன வருத்தமும் ரசிகர்களுக்கு உண்டு. நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுகிறது.

முன்னணி பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், நடிகர் சூர்யா ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக நடிகை ராதிகா மதன் நடிக்கிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக் படத்தை CAPE OF GOOD FILMS, ABUNDANTIA ENTERTAINMENT ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து சூர்யா தனது 2D என்டர்டெய்ன்மென்ட் சார்பாக தயாரிக்கிறார்.

ஹிந்தி ரீமேக்கிலும் ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் தொடங்கப்பட்ட இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் நடிகர் சூர்யா சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக்கில் முக்கியமான சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக சில தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அக்ஷய் குமாருடன் தமிழில் பொம்மி கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை அபர்ணா பாலமுரளி இருக்கும் புதிய புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Aparna Balamurali✨ (@aparna.balamurali)