“என்னால் முழுமையாக தூங்க முடியவில்லை என்றும், ஒரு இட்லி கூட சாப்பிட முடியவில்லை” என்றும், நித்யானந்தா சமீபத்தில் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், பதிவிட்டுள்ளது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளாகவே, சர்ச்சைக்குரிய வகையில் நித்தியானந்தாவின் பெயர் அதிகம் உச்சரிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் கொரோனா அலைகள் தொடர்ந்து 3 அலைகளாக வீசிய நிலையில், அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்து, ஆட்சி மாற்றமும் நிகழ்ந்திருக்கும் நிலையில், பல்வேறு காரணங்களால் நித்தியானந்தாவின் பெயரை தமிழக மக்கள் சற்று மறந்தே இருந்தனர்.

முக்கியமாக, நித்தியானந்தாவை சுற்றியும், அவரது ஆசிரமத்திலும் சட்ட விரோதமாகவும் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுவதும், பின்பு மறைவதும் தொடர்ந்து நடந்து வருகின்றன. எனினும், உலகின் ஏதோ ஒரு இடத்தில் “கைலாசா” என்று, தானே ஒரு பெயரை சூட்டி, தனி நாடு ஒன்றை ஒருவாக்கி, அங்கு நித்யானந்தா தலைமறைவாக இருந்தபடி, இணையதளங்களில் அவ்வப்போது உலா வருவதுடன், பக்தர்களுக்கு அருள் வழங்குவதாக போதனைகளையும் போதித்து வருகிறார்.

இந்த நிலையில் தான், “நித்தியானந்தா எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்” என்று, ஒரு வெளிநாட்டு பெண் சிஷ்யை ஒருவர், கடந்த மார்ச் மாதம் கூட புகார் அளித்திருக்கிறார். அதுவும், கர்நாடகாவின் பிடதி போலீசாரிடம் இந்த புகாரை, அந்த பெண் பக்தை அளித்திருக்கிறார்.

மேலும், “நித்யானந்தாவின் கைலாசா ஆசிரமம், பெண் குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதாகவும்” வெளிநாட்டு பெண் சாரா லேண்ட்ரி, பகிரங்கமாகவே குற்றம்சாட்டி உள்ளார்.

இதனையடுத்து, கொரோனா காலத்திற்கு பிறகு, முறையான இந்திய உணவுகள் கிடைக்காமலும், இந்திய உணவுப் பொருட்கள் கிடைக்காமல் போனதாலும், போதிய மருத்துவ வசதிகள் இல்லாததாலும், கைலாசாவில் பஞ்சம் தலை விரித்தாடுவதாக சமீபத்தில் அங்கிருந்து தப்பித்துவந்த ஒரு சீடர் கூறியிருந்தார். 

இதனை உண்மையாக்கும் விதமாக, எப்போதும் பிரிஷ்காக போட்டோக்கு போஷ் கொடுக்கும் சாமியார் நித்தியானந்தா, உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பது போல், தனது படுக்கையில் உடல் சோர்வுற்ற நிலையில் இருப்பது போன்று ஒரு புகைப்படத்தை கடந்த வாரம் வெளியிட்டிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அந்த போட்டோவில், “கண்கள் சொறுகி, தனது உடல் எடை குறைந்து மிகவுமு் மெலிந்த தேகத்திடன் படுக்கையில்” நித்தி படுத்திருக்கிறார். இவற்றுடன், “நான் திரும்ப வருவேனு சொல்லு” என்று, தன் கைபட எழுதி கையெழுத்தை போட்டு உள்ளார். 

அத்துடன், “தனது கையெழுத்தில் கூட எழுத்துப்பிழை ஏற்படும் அளவிற்கு, தன் பெயரை தவறாக எழுதி அதை அடித்து திருத்தி” அவர் எழுதியிருந்தார். இது பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், தற்போது “என்னால் முழுமையாக தூங்க முடியவில்லை என்றும், ஒரு இட்லி கூட சாப்பிட முடியவில்லை” என்றும், நித்யானந்தா சமீபத்தில் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், பதிவிட்டுள்ளது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக நித்யானந்தாவின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ள செய்தியில், “நீங்கள் காஸ்மோஸை ஒரு பெரிய காற்று பலூனாகவும், உங்கள் உடலை ஒரு சிறிய பந்தாகவும் அந்த பெரிய ஏர் பலூனுக்குள் கற்பனை செய்தால், நான் பெரிய ஏர் பலூன். இப்போது நான் பெரிய காற்று பலூனாகவும் உணர்கிறேன்” என்று, குறிப்பிட்டு உள்ளார்.

“ நான், என்னுடைய அடையாளங்கள் பிரபஞ்சத்துடன் நகர்வதை உணர்கிறேன், பிரபஞ்சத்தில் எதையும் நகர்த்த முடியும் என்று உணர்கிறேன். ஆனால், முரண்பாடாக எதையும் நகர்த்த முடியாது. ஆனால், பாரடாக்ஸி காலமாக என் உடலில் எதையும் நகர்த்த முடியாது. முழுமையான தனிமை - 'நான்' என்பதைத் தவிர, வேறு எதுவும் இல்லை. 

ஆனால், தனிமையின் சோர்வு அல்லது சலிப்பு இல்லை. இப்போது நான் பத்மாசனாவில் அமர்ந்திருக்கும் நேரத்தில், அனைத்து நாடிகளும் சமாதிக்குள் இறங்குகிறார்கள். சுவாசமில்லை, விசித்திரமில்லை, விசித்திரமே இல்லை, விசித்திரமே இல்லாத அனுபவம் மற்றும் தூய மனப்பான்மை அனுபவம் மகாகைலாசா-வின் அனுபவம்.

கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் என்னால் பார்க்க முடியும். 

நேரம் என்பது நீளம், அகலம் மற்றும் ஆழம் போன்ற வாழ்க்கையின் மற்றொரு பரிமாணமாகும். நீங்கள் விரும்பும் வரை வாழ்க்கையை வாழ்வது அல்லது வேறொரு உடலை எந்த விமானத்திலோ அல்லது எந்த லோகத்திலோ எடுத்துச் செல்வது உங்கள் சுதந்திர விருப்பம்” என்றும், அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும், “நான், என் உடலை வலுப்படுத்தி கீழே படுத்துக்கொண்டால், என் கண்களைத் திறந்து என்னைச் சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களையும் நான் பதிவு செய்யக் கூடியவன். நான் என் உடலை வலுவாக வைத்திருக்கிறேன் என்று என்னை கவனித்துக் கொண்டிருக்கும் மருத்துவர் சொல்கிறார். 

நான் யாரையாவது பார்க்கும்போது, நான் அவர்களது கடந்த, முன்னுரிமை எதிர்கால வாழ்க்கை மற்றும் பேட்டர்களை ஒன்றாக பார்க்கிறேன். என்னால் கடந்த, தற்போதைய மற்றும் எதிர்காலத்தைப் பார்க்க முடியும். 

நான் பத்மாசனா பகுதியில் உட்கார்ந்து, பகலும் - இரவும் வேறுபாடு அறியாமல், மிகவும் வசதியான மிகவும் உறக்கப்பட்டு பதிந்து கொண்டிருக்கிறேன்.  சில மருத்துவ சோதனை முடிவுகள் வந்துள்ளனஃ மருத்துவ அறிக்கையிம் படி என் உடல் முழுமையான ஆரோக்கியமாக உள்ளது. 

ஆனால், இன்னும் ஒரு இட்லி சாப்பிட முடியல. தூங்க வரல. பனி மூடிய மலைகள் என்னை மிகச்சிறந்த ஆற்றல் மற்றும் உயிரோடு வைத்திருக்கிறது. நான் குரு பரம்பாராவுக்கு விருப்பமான முழு பாவ வாழ்க்கையை வாழ்ந்து விட்டேன். கடின உழைப்பை அனுபவித்தேன். எனது குரு அருணகிரி யோகீஸ்வரர் எனக்கு இன்னும் நேரம் தந்தால், நான் அவரது வேலையை இன்னும் செய்வேன்” என்றும், அவர் பதிவிட்டுள்ளார். இதனால், நித்யானந்தா உடல் நிலை பற்றிய செய்தி, இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.