ரசிகர்களின் ரசனையை மதிக்கும் கலைஞானியாக திகழும் உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியிருக்கும் விக்ரம் திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியுள்ளார்.

கமல் ஹாசனுடன் இணைந்து விக்ரம் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் முன்னணி வேடங்களில் நடிக்க, நரேன், அர்ஜுன் தாஸ், சேம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சம்பத்ராம், ஹரிஷ் பெறடி, ஆண்டனி வர்கீஸ், சிவானி, மகேஸ்வரி, மைனா, நந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ள விக்ரம் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அன்பறிவு மாஸ்டர்ஸ் ஸ்டண்ட் இயக்க த்தில் பக்கா ஆக்ஷன் ப்ளாக் திரைப்படமாக உருவாகியிருக்கும் விக்ரம் திரைப்படத்தை ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது 

விக்ரம் படத்தின் அதிரடியான ட்ரைலர் வெளிவந்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,  முன்னதாக வெளிவந்த "பத்தல பத்தல" மற்றும் "போர் கண்ட சிங்கம்" பாடல்கள் யூட்யூபில் ட்ரெண்டாக்கி வருகின்றன. அந்த வகையில் தற்போது விக்ரம் திரைப்படத்திலிருந்து WASTED பாடல் வெளியானது. கலக்கலான அந்த பாடல் இதோ…