தமிழ் திரை உலகின் நட்சத்திர நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சிலம்பரசன்.TR தற்போது இயக்குனர் ஒபோலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் தயாராகி வரும் பத்து தல திரைப்படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் பத்து தல திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

முன்னதாக 3வது முறையாக இணைந்துள்ள கௌதம் வாசுதேவ் மேனன்-ஏ.ஆர்.ரஹ்மான்-சிலம்பரசன்.TR கூட்டணியில் உருவாகியிருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில், இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

நடிகர் சிலம்பரசன்.TR-ன் திரைப்பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்த மாநாடு திரைப்படம் கடந்த ஆண்டு(2021) இறுதியில் வெளிவந்து மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆனது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அட்டகாசமான டைம் லூப் திரைப்படமாக வெளிவந்த மாநாடு படத்தில் சிலம்பரசன்.TR மற்றும் SJ.சூர்யா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்த மாநாடு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தியது. இந்நிலையில் கடந்த ஆண்டில் மெகா பிளாக்பஸ்டரான மாநாடு திரைப்படம் உலக அளவில் 117 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களின் அந்த ட்விட்டர் பதிவு இதோ…