தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சிலம்பரசன் நடிப்பில் அடுத்ததாக தயாராகி வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. மூன்றாவது முறையாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகர் சிலம்பரசன் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் வெற்றி கூட்டணி இணைந்துள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து ஸ்டுடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா தயாரிப்பில் பத்து தல திரைப்படத்தில் சிலம்பரசன் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து முன்னணி கதாபாத்திரத்திரங்களில் நடிக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். அடுத்ததாக வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி.K.கணேஷ் அவர்களின் தயாரிப்பில் உருவாகும் அடுத்த திரைப்படத்திலும் நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்கிறார். 

கொரோனா குமார் எனும் இந்த புதிய திரைப்படத்தை ரௌத்திரம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா & காஷ்மோரா உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்கவுள்ளார்.முன்னதாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்த மாநாடு திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி ரிலீஸாக வருகிற நவம்பர் 4-ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாநாடு படத்தின் டிரைலர் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியானது.

V ஹவுஸ் புரோடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படத்திற்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.நடிகர் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார். நடிகர் சிலம்பரசனின் அதிரடியான மாநாடு ட்ரெய்லர் வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தற்போது வெளியிட்டுள்ளார்.