15 வயது சிறுமியை 16 வயது முதல் 23 வயதுடைய 33 பேர், மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் டொம்பிவிலி காவல் நிலையத்தில் கடந்த புதன் கிழமை அன்று பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி ஒருவர், புகார் அளிக்க வந்தார்.

அதன் படி, “என்னை 30 க்கும் மேற்பட்டவர்கள் கடந்த 9 மாதங்களாக மாறி மாறி பாலியல் பலாத்காரம் மற்றும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக” புகார் கூறியிருக்கிறார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த சிறுமியிடம் புகாரை பெற்றுக்கொண்டு, “என்ன நடந்தது?” என்று விசாரித்து உள்ளனர்.

அதாவது, அந்த 15 வயது சிறுமி அளித்த புகாரின்படி, “கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி அன்று, நண்பர் ஒருவர் அந்த சிறுமியை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். 

அப்போது, அதனை வீடியோவாகவும் எடுத்த அந்த இளைஞன், அந்த வீடியோவை வைத்து அந்த சிறுமியை தொடர்ந்து மிரட்டி வந்த நிலையில், அந்த சிறுமியை அவர் தொடர்ந்து பல முறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான்.

இதனையடுத்து, பாலியல் பலாத்கார வீடியோவை, அந்த இளைஞன் தனது நண்பர்களுக்கும் காட்டிய நிலையில், அந்த நண்பர்களும், அந்த நணர்பளுக்கு தெரிந்தவர்கள் என்று, அந்த சிறுமியை அங்குள்ள டொம்பிவிலி, பத்பாபுர், முர்பத் மற்றும் ரபேல் என்று அந்த மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு அந்த சிறுமியை மிரட்டி வரவழைத்து, கூட்டாக சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

அதுவும் கிட்டதட்ட 33 பேர் அந்த 15 வயது சிறுமியை தொடர்ந்து 9 மாதங்களாக நாசம் செய்து, அந்த சிறுமியின் வாழ்க்கையை முற்றிலுமாக சீரழித்து உள்ளனர்.

குறிப்பாக, அந்த 15 வயது சிறுமியை தொடர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த அந்த 33 பேரும், 16 வயது முதல் 23 வயது உடையவர்கள் என்றும், இதில் 2 பேர் மைனர் சிறுவர்கள்” என்பதும் போலீசாருக்கு தெரிய வந்தது. 

இப்படியாக, பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தன்னை பாலியல் பலாத்காரம் செய்த 33 பேரின் பெயர்களையும் காவல் துறையினரும் கூறியிருக்கிறார். 

அந்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார் முதல்கட்டமாக 28 பேரை அதிரடியாக போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். மற்றவர்கள் தற்போது தலைமறைவாகிவிட்ட நிலையில், அவர்களையும் கைது செய்யும் முனைப்பில் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதனிடையே, 15 வயது சிறுமியை 33 பேர் மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.