இயக்குனர் மணிரத்னத்தின் கடல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் கௌதம் கார்த்திக் . தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அடுத்ததாக நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குனர் சேரன் இணைந்து நடித்து விரைவில் வெளிவர உள்ள திரைப்படம் ஆனந்தம் விளையாடும் வீடு.

ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்படத்தில் பிரபல இளம் நடிகை ஷிவாத்மிகா கதாநாயகியாக நடிக்க மௌனிகா, சரவணன், சினேகன், ஜாக்குலின், மைனா, சுஜிதா, சிங்கம் புலி, டேனியல் பாலாஜி, நமோ நாராயணன், சௌந்தர்ராஜன், நக்கலைட்ஸ் தனம் உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது.நடிகர் & இயக்குனர் சேரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் தயாராகி வரும் ஆனந்தம் விளையாடும் வீடு.ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பி ரங்கநாதன் ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்படத்தை தயாரித்துள்ளார்.ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் பாலபரணி ஒளிப்பதிவு செய்கிறார் இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைக்கிறார்.
 
இந்நிலையில் தற்போது ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் டீசர் வெளியானது. அழகான குடும்ப திரைப்படமாக தயாராகியுள்ள ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அழகான அந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.