தமிழ் சின்னத்திரை உலகில் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றான விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக வலம் வருபவர் ரக்ஷன். விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமான ரக்ஷன் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

குறிப்பாக விஜய் தொலைக்காட்சியின் மாபெரும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக ரசிகர்களை மகிழ்விக்கும் ரக்ஷன் தமிழ் சினிமாவில் நடிகராகவும் களமிறங்கினார். நடிகர் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்து இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரக்ஷன்.

இந்நிலையில் ரக்ஷனின் புதிய மியூசிக் வீடியோ பாடல் தற்போது யூடியூபில் வெளியாகி வைரலாகி வருகிறது. என்ன வாழ்க்கைடா என்னும் இந்த பாடலில் ரக்ஷன் உடன் இணைந்து  விஜய் டிவியின் சுனிதா மற்றும் நடிகை சுவாதிஸ்டா இணைந்து நடித்துள்ளனர். இவர்களோடு இணைந்து  டிக் டாக் பிரபலமான ஜிபி முத்து நடித்துள்ளார். சரிகம ஒரிஜினல்ஸ் மற்றும் நாய்ஸ் & க்ரெய்ன்ஸ் இணைந்து வழங்கும் என்ன வாழ்க்கைடா பாடலை இசையமைப்பாளர் கணேசன்.எஸ் இசையமைத்துள்ளார்.

A.Pa.ராஜா எழுதிய இப்பாடலை பிரபல பாடகர் பென்னி தயால் மற்றும் வ்ருஷா பாலு இணைந்து பாடியுள்ளனர். என்ன வாழ்க்கடா பாடலை இயக்குனர் டாங்லி ஜம்போ இயக்கியுள்ளார்.அபு & சால்ஸ் நடன இயக்கம் செய்ய தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள என்ன வாழ்க்கைடா என்னும் கலகலப்பான இந்த மியூசிக் வீடியோ பாடல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது இந்த பாடலை கீழே உள்ள லிங்கை காணலாம்.