மனைவிக்கு தொடர்ந்து செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்த கணவனின் ஆணுறுப்பை, மனைவியே அறுத்தெறிந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

“கட்டிய கணவனாகவே இருந்தாலும், மனைவியின் அனுமதியின்றி அவரை அணுகினால், அதுவும் பாலியல் பலாத்காரம் என எடுத்துக்கொள்ளப்படும்” என்று, சமீபத்தில் நீதிமன்றம் வெளிப்படையாகத் தீர்ப்பு வழங்கியது.

மெகபூபாபாத் மாவட்டம் மாரிப்பாடா மண்டலத்தின் தனஞ்செர்லா பகுதியைச் சேர்ந்தவர் 45 வயதான பிச்சநாயக் என்பவர், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை இரு வீட்டார் சம்மதத்துடன் முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதிக்கு தற்போது குழந்தைகள் உள்ள நிலையில், கணவன் தனஞ்செர்லாவுக்கு சமீபகாலமாக பாலியல் இன்பத்தில் அதிக ஈர்ப்பு ஏற்பட்டு, தனது மனைவிக்கு  எல்லை மீறிய செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், தொடக்கத்தில் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, தனது கணவனை பலமுறை தொடர்ந்து எச்சரித்து உள்ளார். 

ஆனால், மனைவியின் மிரட்டலை அவரது கணவன் பிச்சநாயக் அதைப் பெரிதாகப் பொருட்படுத்தவேயில்லை என்றும் தெரிகிறது. 

அத்துடன், தினமும் இரவில் கணவனின் பாலியல் தொல்லைகள் தொடர்ந்து அதிகரித்து உள்ளது. 

ஒரு கட்டத்தில் கணவனின் பாலியல் டார்ச்சர் எல்லை மீறி போகவே, கடும் கோபம் அடைந்த அவரது மனைவி, கொலை வெறியில் இருந்து உள்ளார்.

அப்போது, அந்த கணவன் தனது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளார்.

அப்போது, ஏற்கனவே தான் தயாராக வைத்திருந்த அரிவாளால், தனது கணவனின் ஆணுறுப்பை, அந்த மனைவி வெட்டி உள்ளார்.

இதனால், அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பிச்சநாயக், வலியால் அலறி துடித்து சத்தம் போட்டு கத்திய நிலையில் அங்கேயே மயங்கி உள்ளார்.

பிச்சநாயக்கின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது, அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்து உள்ளார். இதனால் பதறிப்போன அவர்கள், உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார், கணவனை கொலை செய்த மனைவி மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். 

இந்த விசாரணையில், “கணவன், மனைவிக்கு தொடர்ந்து செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்த நிலையில், பாதிக்கப்பட்ட மனைவி, கணவனின் ஆணுறுப்பை வெட்டி கொலை செய்துள்ளது” போலீசாருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து, அவரை சிறையில் அடைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் தெலங்கானாவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.