தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் அபிமானம் பெற்ற பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றான விஜய் தொலைக்காட்சியில்  முன்னணி தொகுப்பாளராக பல கோடி தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த தொகுப்பாளர் மாகாபா ஆனந்த். தொலைக்காட்சியில் தொகுப்பாளராக கலக்கும் மா கா பா ஆனந்த் வெள்ளித்திரையில் நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான அது இது எது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மாகாபா ஆனந்த் விஜய் டிவியின் மிக முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் KPY சாம்பியன்ஸ், Mr &Mrs சின்னத்திரை என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில் மா கா பா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. பல ரசிகர்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளரான மா கா பா ஆனந்திற்கு திடீரென கட்டை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதில் கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக தனது கட்டை விரலில் மேற்கொள்ளப்பட்ட எக்ஸ்-ரே படத்தினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உறுதிப்படுத்தியிருக்கிறார் மாகாபா ஆனந்த். எனவே இந்த காயத்திலிருந்து மாகாபா ஆனந்த் விரைவில் குணமடைந்து வர சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் “GET WELL SOON” என பகிர்ந்து வருகிறார்கள்.

vj ma ka pa anand finger injury and fractured xray photo goes viral on social media

vj ma ka pa anand finger injury and fractured xray photo goes viral on social media