தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகிகளில் ஒருவரும் விஜய் டிவியின் பிக் பாஸ் போட்டியாளருமான ஓவியா மற்றும் நடிகர் யோகிபாபு முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.தமிழ் சினிமாவின் இன்றியமையாத நகைச்சுவை நடிகராக உயர்ந்து நிற்கிறார் நடிகர் யோகிபாபு. 

குறிப்பாக தளபதி விஜய்யின் பீஸ்ட் தல அஜித் குமாரின் வலிமை சிவகார்த்திகேயனின் டாக்டர் & அயலான் உள்ளிட்ட  திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. அடுத்ததாக யோகிபாபு , நடிகை ஓவியா உடன் இணைந்து புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு வைகைப்புயல் வடிவேலுவின் பிரபல கதாபாத்திரத்தின் பெயரானா கான்ட்ராக்டர் நேசமணி என பெயரிடப்பட்டுள்ளது.

கான்ட்ராக்டர் நேசமணி திரைபடத்தை அன்கா மீடியா தயாரிக்கிறது. சௌந்தர்யன் பிக்சர்ஸ் விடியல் ராஜு மற்றும் ஏ.வி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் எஸ்.எஸ்.பிரபு இணைந்து வழங்கும் யோகி பாபு-ஓவியாவின் கான்ட்ராக்டர் நேசமணி திரைப்படம் இன்று பூஜையோடு படப்பிடிப்பு தொடங்கப்பட்டு உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ஸ்வதீஷ்.M.S.  எழுதி இயக்கும் கான்ட்ராக்டர் நேசமணி திரைப்படத்திற்கு சுபாஷ் தண்டபாணி ஒளிப்பதிவு செய்ய தர்மா பிரகாஷ் இசையமைக்கிறார்.  வைகைப்புயல் வடிவேலுவின் மிகவும் பிரபலமான கான்ட்ராக்டர் நேசமணி என்னும் தலைப்பை கொண்ட யோகி பாபு ஓவியாவின் இந்த புதிய திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.