விஜய் டிவியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3 போட்டியாளராக கலந்து கொண்டு தமிழக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நடிகர் கவின் விஜய் டிவியின் பிரபலமான பல மெகா தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையில் கதாநாயகனாக களமிறங்கும் நடிகர் கவின் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் லிப்ட். ஈகா என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் ஹெப்ஸி தயாரித்திருக்கும் லிப்ட் திரைப்படத்தில் நடிகர் கவின் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக நடிகை அம்ரிதா நடித்துள்ளார். 

த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் லிப்ட் திரைப்படத்தை இயக்குனர் வினித் வரப்பிரசாத் எழுதி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் எஸ்.யுவா ஒளிப்பதிவில் ஜி.மதன் படத்தொகுப்பு செய்துள்ள லிப்ட் திரைப்படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார். முன்னதாக லிப்ட் திரைப்படத்திலிருந்து வெளியான இன்னா மைலு எனும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. 

திரையரங்குகள் திறக்கப்படும் போது திரையரங்குகளில் லிப்ட் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி டிஸ்னி ப்லஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் நேரடியாக லிப்ட் திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று லிப்ட் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. த்ரில்லான அந்த ட்ரெய்லரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.