சாதனை முதல் சம்பவங்கள் வரை 2020 ஆம் ஆண்டில் நிகழ்ந்த இந்திய கிரிக்கெட் நிகழ்வுகள் பற்றி தற்போது பார்க்கலாம்.. 

- ஆகஸ்ட் 15 ஆம் தேதி, “கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணியைத் தலைமை ஏற்று வழிநடத்திச் சென்ற ஜாம்பவன் மகேந்திர சிங் தோனி” கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென்று அறிவித்தார். தோனி, சுமார் 16 ஆண்டுகள் இந்திய அணிக்கா விளையாடி பல சாதனைகளைப் படைத்திருக்கிறார். தோனி தலைமையில் தான், இந்திய அணி ஐசிசியின் அனைத்து வகைக் கோப்பைகளையும் வென்று சாதித்து காட்டியது. 

- தோனி ஓய்வு அறிவித்த உடனே, அவரின் நெருங்கிய நண்பரான சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இவரும் ஒன்றாக விளையாடிய போது, தோனியை “தல” என்றும், சுரேஷ் ரெய்னாவை “சின்ன தல” என்றும், ரசிகர்கள் அன்போடு அழைப்பது வழக்கம். 

- இந்தியாவில் ஆண்டு தோறும் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடத்தபடும் ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டி, இந்த ஆண்டு நடைபெறுமா என்ற பெரும் சந்தேகம் எழுந்தது. ஒரு வழயிகா கொரோனா பரவுக்கு மத்தியிலும், கிரிக்கெட் ரசிகர்கள் இன்றி, ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டி நடைபெற்று முடிந்தது.

- சென்னை சூப்பர் கிங்ஸில் அணியில் ஆஸ்தான வீரர்களாக இருந்த சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் போட்டி தொடங்கும் முன்பே அணியிலிருந்து வெளியேறி இந்தியா திரும்பினர். எனினும் போட்டியில் கலந்துகொண்ட சென்னை அணியானது, முதல் முறையாக ப்ளே ஆப் சுற்றுக்கூட செல்லாமல் போட்டியிலிருந்து வெளியேறியது. இது, சென்னை ரசிகர்களுக்குப் பெருத்த ஏமாற்றமாக அமைந்துபோனது.

- இந்த ஆண்டு நடைபெற்ற 13 வது ஐபிஎல் சீசனில் இறுதிப்போட்டி கடந்த நவம்பர் 10 ஆம் தேதி நடைபெற்றது. இதில், ஸ்ரேயாஷ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியை வீழ்த்தி, ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி 4 வது முறையாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்தது.

- தற்போது இந்திய அணியின் கேப்டனாக உள்ள விராட் கோலி 2020 ஆம் ஆண்டில் ஒரு சதம் கூட எடுக்கவில்லை. எனினும், வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளையும் அவர் இந்தாண்டு பதிவு செய்துள்ளார். அதாவது, “இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3 வது ஒருநாள் போட்டியில், 3 வது வரிசையில் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி, 23 ரன்கள் எடுத்த போது, அவர் சர்வதேச ஒரு நாள் போட்டியில் 242 இன்னிங்ஸில் விளையாடி 12 ஆயிரம் ரன்களை எடுத்த முதல் வீரராக சாதனை படைத்தார். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் 300 இன்னிங்ஸில் இந்த சாதனையைப் படைத்திருந்தார். அந்த சாதனையை தற்போது முறியடிக்கப்பட்டது.

- குறிப்பாக, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2 வது ஒரு நாள் போட்டியில் விராட் கோலி 89 ரன்கள் எடுத்து மூலமாக, சர்வதேச கிரிக்கெட்டில் அவர் 22 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். 

- இந்த 2020 ஆம் ஆண்டில் டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முழு ஆதிக்கம் செலுத்தி உள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில், நியூசிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5-0 என டி 20 தொடரைக் கைப்பற்றிச் சாதித்துக் காட்டியது. மீண்டும், சமீபத்தில் ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்ற டி 20 போட்டியிலும் 2-1 என்று, 2 வது முறையாக டி 20 தொடரைக் கைப்பற்றிச் சாதித்துக் காட்டியது.

- ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பட்டியலில் இந்திய வீரர் ரஹானே, மெல்போர்ன் டெஸ்ட் அபார சதத்துக்குப் பிறகு 6 ஆம் இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

- ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பட்டியலில், கேப்டன் விராட் கோலி 879 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில், இந்திய வீரர் புஜாரா 10 வது இடத்தில் உள்ளார்.

- ஐசிசி டெஸ்ட் பவுலிங் தரவரிசையில் இந்திய வீரர் அஸ்வின் 7 வது இடத்தில் உள்ளார். பும்ரா 9 வது இடத்தில் இருக்கிறார்.

- ஐசிசி ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர் ஜடேஜா 3 வது இடத்தில் உள்ளார். இதில், அஸ்வின் 6 வது இடத்தில் இருக்கிறார்.

- இந்த அண்டு ஐபிஎல் போட்டியில் இடம் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இளம் புயல் நடராஜன், தனது திறமையை நிறுபித்துக்காட்டி, இந்திய அணியில் இடம் பிடித்தார்.