தனது மனைவியை கணவனே 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதால், வாங்கியவன் உட்பட 4 பேர் கூட்டாகச் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளது சம்பவம், கடும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி, அனைத்து தரப்பு மக்களையும் பீதிக்கு உள்ளாக்கி உள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் லாகூரில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பஞ்சாப் மாகாணத்தில் தான் இப்படி ஒரு கொடூரம் அரங்கேறி இருக்கிறது.

பஞ்சாப் மாகாணம் வடக்கு சர்கோதா என்னும் பகுதியில், கணவன் - மனைவிகளாக ஒரு தம்பதியினர் வசித்து வந்தனர். அப்போது, அவர்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அத்துடன், மதுவுக்கு அடிமையான அந்த கணவன், பணத்திற்காக, தன்னுடைய மனைவியை விற்கவும் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் பேசி தனது மனைவியை வெறும் 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்று உள்ளார்.

அதன் பின், அந்த பெண்ணை 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய அந்த நபர், தனக்குச் சொந்தமான மற்றொரு வீட்டில் அந்த பெண்ணை அடைத்து வைத்து உள்ளார். அதன் பிறகு, அவர் மட்டுமே அந்த பெண்ணை சில நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அதன் பிறகு, தன்னுடைய நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து, அந்த பெண்ணை பலவந்தமாக கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த கும்பலிடம் சிக்கித் தவித்த அந்த பெண், அங்கிருந்து மீண்டு வர முடியாமல் அந்த 4 பேரிடமும் தொடர்ச்சியாகப் போராடி உள்ளார். ஆனால், அந்த 4 பேரும் துளியும் ஈவும், இறக்கமும் இன்றி, அந்த பெண்ணை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

இதனால், தினம் தினம் நரக வேதனை அனுபவித்த அந்த பெண், எப்படியும் இங்கிருந்து தப்பிச் செல்ல வேண்டும் என்று தீர்மானமாக இருந்தார். அதே நேரத்தில், அந்த 4 பேரும் தொடர்ச்சியாக அந்த பெண்ணை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்ததால், அங்கிருந்து எழுந்து கூட நடமாட முடியாமல் வலியால் கடும் அவதிப்பட்டு வந்துள்ளார்.

ஒரு வழியாக, அந்த 4 பேரும் அங்கிருந்து தங்களது வீடுகளுக்குச் சென்ற நேரம் பார்த்து, தனது உடலில் வலிமையையும், உறுதியையும் வரவழைத்துக்கொண்ட அந்த பெண், அங்கிருந்து 21 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு, எப்படியோ தப்பித்து, வெளியே வந்துள்ளார்.

அதன் பிறகு, அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், அந்த பெண் புகார் அளித்துள்ளார். இந்த தகவல் வெளியே கசிந்தது. ஆனால், போலீசார் அந்த பெண்ணின் புகாரை ஏற்க மறுத்து விட்டனர்.

இதனையடுத்து, அங்கிருந்து நேரமாக சர்கோதா செஷன்ஸ் நீதிமன்றம் சென்று, தனக்கு நேர்ந்த கொடுமைகளைக் குறிப்பிட்டு, தன் கணவன் மீதும் தன்னை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த அந்த 4 பேர் மீதும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த சர்கோதா செஷன்ஸ் நீதிமன்றம், இந்த சம்பவம் குறித்து வரும் 2 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று, மாவட்ட காவல் துறை அதிகாரிக்கு அதிரடியாக உத்தரவிட்டது. 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பெண்ணிடம் ஒப்புதல் வாக்கு மூலம் பெற்று, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனிடையே, தனது மனைவியை கணவனே 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதால், வாங்கியவன் உட்பட 4 பேர் கூட்டாகச் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம், பாகிஸ்தான் நாட்டில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.