உலகில் இயற்கை பேரிடர்கள் அதிகம் ஏற்படும் நாடுகளில் ஒன்றாக துருக்கியும், கிரீஸும் இருந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று (அக்டோபர் 30) மாலை கிரீஸ் கடல் பகுதியான ஏஜியன் கடலிலின் 16 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் கிரீஸ் தீவுகள், துருக்கி, பல்கேரியா, வடக்கு மசடோனியா ஆகிய நாடுகளில் உணரப்பட்டது. இதில் அதிகபட்சமாக துருக்கியின் இஷ்மிர் மாகாணத்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானது. 

கடலில் இந்தளவுக்கு கடுமையாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி பேரலை அப்பகுதியில் உருவானது. இதனால் இஸ்மிர் நகரத்திற்குள் கடல் நீர் புகுந்தது. வீதியில் நின்ற கார்கள், வீட்டில் இருந்த பொருட்களை கடல் நீர் சுருட்டிக் கொண்டு சென்றது.

2004-ம் ஆண்டு இந்தோனேசியா சுமத்ரா தீவில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தில் இந்தோனேசியா, இந்தியா (குறிப்பாக தமிழ்நாடு), இலங்கை போன்ற நாடுகளில் சுனாமி அலை ஏற்பட்டு கடும் விளைவை ஏற்படுத்தியது. அந்த சுனாமி அலையை தற்போது துருக்கி நிலநடுக்கம் ஞாபகப்படுத்தியுள்ளது.

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 26 போ் உயிரிழந்தனா்; 800 போ் காயமடைந்தனா். இஸ்மிா் மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. எட்டு மாடிகளைக் கொண்ட கட்டடம் தரைமட்டமானதில், சிக்கியவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். சம்பவப் பகுதியில்  ஹெலிகாப்டா்கள், ஆம்புலன்ஸுகளின் உதவியுடன் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சமோஸ் தீவு மற்றும் துருக்கியின் கடலோரப் பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கின. இதனால் முக்கிய துறைமுகப் பகுதியான வதி நகரின் சாலைகளில் கடல்நீர் புகுந்து ஆறு போல ஓடியது. நிலநடுக்கம் ஏற்பட்டதும், கடலோரப் பகுதிக்கு அருகில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

கிரீஸ் நாட்டின் சமோஸ் தீவுக்கு 13 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் ரிக்டா் அளவுகோலில் அது 6.9 அலகுகளாகப் பதிவானதாகவும் ஐரேப்பிய-மத்தியதரைக் கடல் நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான அதிர்வலைகள் ஏற்பட்டன. 

திடீரென ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் துருக்கியின் இஸ்மிர், இஸ்தான்புல், மார்மரா அகிய பகுதியிலும் கிரீஸின் சமோஸ் பகுதியிலும் கட்டிடங்கள் இடிந்து பலத்த சேதமடைந்தன, இதனால் ஏராளமான மக்கள் வீதிளில் தஞ்சம் புகுந்தனர். அதோடு அதனை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளில் கடல் நீர் நகருக்குள் புகுந்தது. வீடுகளில் சிக்கிக் கொண்ட மக்கள் உதவிக்கு காத்திருக்கின்றனர். இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இஷ்மிர் மாகாணத்தில் 4 பேர் உயிரிழந்ததாகவும் 120-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு நேற்று தெரிவித்திருந்தது.

மேலும் கீரிஸ் மற்றும் துருக்கியில் இதர பகுதிகளில் பாதிப்பு அதிகம் இருக்கலாம் என கருதப்படுகிறது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள பேரிடர் மீட்புப் படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.