நாமக்கல் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் அருகே, 25 ஏக்கர் பரப்பளவில் 336 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கான கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. கடந்த மார்ச் 5ம் தேதி கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை விழா நடந்தது. அடுத்த ஆண்டு வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே புதிய மருத்துவக்கல்லூரி கட்டடத்தை திறந்து விட வேண்டும் என்ற முனைப்புடன் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் கட்டுமான வேலைகளில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை 2:30 மணியளவில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்தின் முன்பகுதி கான்கிரீட் தளம் இடிந்து விழுந்ததாகச் சொல்லப்படுகிறது. நாமக்கல் நகரில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கட்டடத்தின் முன்பகுதி கான்கிரீட் தளம் இன்று அதிகாலை இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மாவட்ட மக்களின் நெடுநாள் கோரிக்கையை ஏற்று, நாமக்கல்லில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டுவருகிறது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள 25 ஏக்கர் நிலப்பரப்பில், சுமார் ரூ.336 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டுவருகிறது.

கடந்த மார்ச் மாதம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் பூமி பூஜை போடப்பட்டு, கட்டடம் கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் நேரடியாக விசிட் அடித்த முதல்வர், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கும் பணியைப் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

`வரும் சட்டமன்றத் தேர்தலுக்குள் இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைத் திறந்துவிடவேண்டும்' என்று அமைச்சர் தங்கமணியிடம், முதல்வர் உத்தரவிட்டுச் சென்றதாகவும் சொல்லப்பட்டது. இந்தநிலையில், நூற்றுக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கட்டுமானப் பணிகளில் இரவு, பகலாக ஈடுப்பட்டுவருகின்றனர். இந்தநிலையில், இன்று அதிகாலை 2:30 மணியளவில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்தின் முன்பகுதி கான்கிரீட் தளம் இடிந்து விழுந்ததாகச் சொல்லப்படுகிறது. அங்கே பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்கு, இந்த விபத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்பது தெரியவில்லை.

இந்தநிலையில், இன்று காலை 10 மணிக்கு, ஸ்பாட்டுக்கு வந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ், போர்டிகோ தளம் இடிந்து விழுந்திருந்ததைப் பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,``போர்டிகோ அமைப்பதற்காக கான்க்ரீட் தளம் அமைக்கப்பட்டிருந்தது. அதற்காக, முட்டுக் கொடுக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த கம்புகள் சரியான முறையில் வைக்கப்படவில்லை. அதனால், பொறியாளர்களே அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் அந்த கான்கிரீட் தளம் இடிந்து விழுந்திருக்கிறது. மற்றபடி வேறு எந்தப் பிரச்னையும் இல்லை. இதனால், ஒரு தொழிலாளிக்கும் சிறுகாயம்கூட இல்லை" என்றார்.

ஆனால், இந்தச் சம்பவத்தில் சில தொழிலாளர்களுக்கு காயம் ஏற்பட்டு, அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருப்பதாகத் தகவல் பரவியது. அதை மாவட்ட ஆட்சியர் மெகராஜிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, அதை அவர் மறுத்தார். கட்டுமான நிலையில் இருக்கும்போதே, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் போர்டிகோ போர்ஷன் இடிந்து விழுந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இருப்பினும், கட்டடம் இடிந்து விழுந்ததில் சிலர் காயம் அடைந்ததாகவும், அவர்களுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சிலர் சொல்கிறார்கள். ஆனால் ஆட்சியர் மெகராஜ் இத்தகவலை மறுத்துள்ளார். மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகளை நாமக்கல்லைச் சேர்ந்த 'சத்தியமூர்த்தி அன் கோ' என்ற கட்டுமான நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறது. அந்நிறுவன உரிமையாளர் வீட்டில் கடந்த இரு நாள்களாக வருமான வரித்துறை சோதனை நடந்து வந்தது. இந்நிலையில், கல்லூரியின் முகப்பு மண்டபம் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த கட்டிடம் இடிந்து விழவில்லை என்றும், இடிக்கப்பட்டது என்றும் அமைச்சர் தங்கமணி கூறியிருக்கிறார்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிடக் கட்டுமானப் பணிகளை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி ஆய்வு செய்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "காலை நேரத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிடப் பணி நடந்து கொண்டிருந்தபோது முற்பகுதி சரிந்தது. விபத்துகள் ஏதும் ஏற்படவில்லை. வெல்டிங் விட்டுப் போன காரணத்தினால் பொறியாளர்களே முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக இடித்துவிட்டனர். யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. தற்போது அதனைச் சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பள்ளிப்பாளையத்தில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த இருவருக்கு முதல்வரின் நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சியர் கடிதம் மூலம் பரிந்துரை செய்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் அரசுக் கட்டிடங்கள் தரமானதாக இல்லை என நாமக்கல் எம்.பி. சின்ராஜ் குற்றச்சாட்டு எழுப்பி வருகிறார். எம்.பி. பணி மக்களுக்குச் சேவை செய்வதற்காகத்தான். கட்டிடங்களைத் தரம் பார்ப்பது அதிகாரிகளின் பணி. அதற்காகத்தான் அரசு அதிகாரிகளுக்குச் சம்பளம் கொடுக்கப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை விட்டுவிட்டு அரசியல் விளம்பரத்திற்காக இது போன்ற செயல்களை அவர் செய்து வருகிறார். தேர்தலுக்கு முன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும். தமிழகத்தில் மின் கட்டணம் உயர வாய்ப்பில்லை, தேர்தல் நேரம் என்பதால் நீங்களாகவே கூறிக்கொள்கிறீர்கள். இயற்கையின் சீற்றம் காரணமாகவே பாதுகாப்பு கருதி ஆங்காங்கே மின் தடை ஏற்படுகிறது.

பொள்ளாச்சி உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி 90 சதவீதம் முடிவடைந்ததால் அப்பகுதி விவசாயிகள் இழப்பீடு தொகையைக் கொடுத்துவிட்டு எஞ்சிய பணிகளைத் தொடங்குமாறு கூறுகின்றனர். அதிகாரிகள் மற்றும் ஆட்சியரிடம் மதிப்பீடு தொகை எவ்வளவு எனக் கணக்கீடு செய்த பின் நிவாரணத் தொகை வழங்கப்படும்" என்றார்.

நாமக்கல்லைச் சேர்ந்தவர் அரசு ஒப்பந்ததாரர் சத்தியமூர்த்தி. தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு கட்டிடக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவர் வரி ஏய்ப்பு செய்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த இரு தினங்களாக இவரது வீடு, அலுவலகம் ஆகியவற்றில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவர்தான் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை கட்டிடத்தைக் கட்டுவதற்கான ஒப்பந்ததாரர் என்பது குறிப்பிடத்தக்கது.