14 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்ததால், தன் பெற்றோருக்கு பயந்து பிறந்த குழந்தையை ஃப்ரீசருக்குள் வைத்ததில், குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

உலக வல்லரசான ரஷ்யாவில் தான், இப்படி ஒரு துயர சம்பவம் அரங்கேறி உள்ளது.

ரஷ்யா நாட்டின் சைபீரியாவில் உள்ள வெர்க் துலா என்னும் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த பல மாதங்களாக பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், அந்த சிறுமி வீட்டிலேயே இருந்து வந்தார்.

கொரோனா ஊரடங்கிற்கு முன்னதாக, அந்த சிறுமி தன்னுடன் பள்ளியில் படிக்கும் 16 வயது சிறுவனை காதலித்து வந்து உள்ளார். அப்போது, காதலர்கள் இருவரும் சிறுவர் சிறுமிகள் என்பதால், தங்களை அறியாமல் உணர்ச்சிவசப்பட்டு உடல் ரீதியாக அந்த சிறுவர்கள் சேர்ந்து உள்ளனர். இதனால், அந்த சிறுமி கர்ப்பம் தரித்தார்.

ஆனால், அதன் தொடர்ச்சியாக கொரோனா ஊரடங்கு காரணமாக, அந்த சிறுமி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததால், காதலர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தங்களது காதலை முறித்துக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, அந்த 14 வயது சிறுமியின் வயிறு பெரிதாகிக்கொண்டே சென்றது. இதனை அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள் கவனித்து உள்ளனர். 

பின்னர், இது குறித்து சிறுமியிடம் வாசரித்து உள்ளனர். அப்போது, அந்த சிறுமி ஆட்களுக்குத் தகுந்தார் போல் மாறி மாறி பேசி உள்ளனர்.

இதனால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள், சிறுமியின் தயாரிடம் இது பற்றி கூறி, “உங்கள் மகள் கர்ப்பமாக இருப்பதாக” தெரிவித்து உள்ளனர். அதற்கு, சிறுமியின் தாயாரோ, “என் மகளின் உடல் எடை கூடுகிறது. வேற ஒன்றும் இல்லை” என்று, பதில் அளித்து இருக்கிறார்.

ஆனால், தனது பெற்றோர் மிகவும் கண்டிப்பானவர்கள் என்பதால், தான் கர்ப்பமாக இருப்பதை, தனது பெற்றோரிடம் கூறாமல் சிறுமி மறைத்து விட்டார். அதன் தொடர்ச்சியாக, சிறுமிக்கு 9 மாதங்கள் கடந்த நிலையில், திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. 

மேலும், தனக்கு குழந்தை பிறந்தால், எந்த இடத்தில் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது குறித்தும், அந்த சிறுமி முன்கூட்டியே இடத்தையும் பார்த்து வைத்துக்கொண்டார். அதன்படி, அந்த சிறுமிக்கு வயிற்று வலி ஏற்படவே, அந்த பகுதியில் உள்ள ஆட்கள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்திற்குச் சென்ற அந்த சிறுமி, குழந்தையை தாமாகவே பெற்றெடுத்துக்கொண்டார். 

அதன் தொடர்ச்சியாக, சிறிது நேரத்தில் தன் குழந்தையுடன் அந்த சிறுமி வீட்டிற்கு யாருக்கும் தெரியாமல் வந்து உள்ளார். அப்போது, சிறுமியின் தந்தை, வீட்டின் தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். அந்த இடைப்பட்ட நேரத்தில் வீட்டிற்குள் குழந்தையுடன் வந்த அந்த சிறுமி, வீட்டினுள் வந்ததும் ஒரு பிளாஸ்டிக் பையில் தன் குழந்தையை போட்டு அங்குள்ள ஒரு கேரேஜில் உள்ள ஃப்ரீசர் பாக்ஸில் வைத்து மூடியிருக்கிறார்.

ஆனால், அதன் தொடர்ச்சியாக, குழந்தை பிறந்ததின் காரணமாக, அந்த சிறுமிக்குத் தொடர்ச்சியாக ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது. இதனை கவனித்த சிறுமியின் தயார், தன் மகளுக்கு குடல் அழற்சி ஏற்பட்டிருக்கலாம் என்று நினைத்து, மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸை வீட்டிற்கு அழைத்திருக்கிறார்.

அதன்படி, ஆம்புலன்ஸ் வீட்டிற்கு வந்ததும், அதில் ஏறி மருத்துவமனைக்கு செல்லும் வழியில், மருத்துவர்கள் அந்த சிறுமியிடம் விசாரித்து உள்ளனர். அப்போது, “தான் கர்ப்பமாக இருந்ததையும், குழந்தை பெற்றெடுத்ததையும்” துணை மருத்துவர்களிடம் கூறி அழுதிருக்கிறார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், “அந்த குழந்தை எங்கே?” என்று விசாரித்து உள்ளனர். அதன் படி, குழந்தை இருக்கும் இடத்தையும், ஃப்ரீசருக்குள் வைத்ததையும் சிறுமி கூறியிருக்கிறார். இதனால், பதறிப்போன அவர்கள் குறிப்பிட்ட ஃப்ரீசருக்குள் வைத்திருந்த குழந்தையை வந்து பார்த்து உள்ளனர். அப்போது, அதிக குளிரால் அந்த பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. அதன் தொடர்ச்சியாக, குழந்தையின் சடலத்தை மீட்ட மருத்துவர்கள், குழந்தை பெற்றெடுத்த சிறுமியையும், மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிறுமிக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், சிறுமிக்கு அதிக அளவில் ரத்தம் போனால், சிறுமி தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றனர்.

அத்துடன், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அந்நாட்டு போலீசார், சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில், தான் படிக்கும் பள்ளியில் படிக்கும் 16 வயது சிறுவனின் பெயரை கூறி இருக்கிறார். மேலும், தங்களது காதல் முறிந்த கதையையும் அவர் கூறி அழுதிருக்கிறார். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பீதியும் ஏற்பட்டது.