சீன அதிபர் ஜி ஜின்பிங் மேலும் 15 ஆண்டுகளுக்கு  பதவியில் தொடருவதற்கு அந்நாட்டில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புதல் அளித்தது. 

சீனாவில் கம்யூனிஸ்டு கட்சியின் ஒரு கட்சி ஆட்சி முறை நடைமுறையில் உள்ளது. அதிபர் ஜி ஜின்பிங் கடந்த 2012-ம் ஆண்டு சீன அதிபராக பொறுப்பு ஏற்றார். அவரது 2-வது பதவிக்காலம் 2022-ம் ஆண்டு முடிவடைய இருந்தது. இந்நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆண்டு மாநாடு பெய்ஜிங்கில் கடந்த 4 நாள்களாக நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் 198 மத்தியக் குழுஉறுப்பினா்கள், 166 மாற்று உறுப்பினா்கள் பங்கேற்றனா். இதில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு சாா்பில் மத்தியக் குழு உறுப்பினா்கள், அதிபா் ஷி ஜின்பிங்கின் செயல்பாடுகளை ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த 15 ஆண்டுகளுக்கு சீனாவின் அதிபராக தொடர்ந்து பணியாற்ற மத்தியக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், 14-வது ஐந்தாண்டு திட்டத்திற்கும் (2021- 2025) ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஏற்றுமதியை அதிகமாக நம்பி இருக்காமல் உள்நாட்டு நுகர்வு மூலம் நாட்டின் பொருளாதார கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு இந்த ஐந்தாண்டு திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டில் கம்யூனிஸ்டு கட்சியின் 198 மத்தியக்குழு உறுப்பினர்கள், 166 மாற்று உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இன்னும் 15 ஆண்டுகளுக்கு அதிபர் ஜி ஜின்பிங்-கிற்கு பதவி நீட்டிக்கப்பட்டு இருப்பதால், அந்த பதவிக்காலம் முடியும் போது அவருக்கு வயது 82 ஆகு இருக்கும். சீன அதிபர் பதவி தவிர கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் பதவி, ராணுவத்தின் தலைமை பதவி ஆகியவற்றையும் ஜி ஜின்பிங் தன் வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.