சென்னையில் திருமணம் தொடர்ச்சியாக தடைப்பட்டதால் கடும் விரக்தியடைந்த இளம் பெண் ஒருவர், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டை பகுதியைச் சேர்ந்த பி.காம் படித்த பட்டதாரியான இளம் பெண் 25 வயதான யாமினி என்ற பெண், சென்னை ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டை சுப்பராயன் தெருவைச் சேர்ந்த  25 வயதான யாமினி என்ற இளம் பெண், பி.காம் படித்த பட்டதாரி ஆவார். இவர், சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். 

இவரது தந்தை இறந்த நிலையில், தனது தாய் தாட்சாயிணியுடன் தனது சொந்த வீட்டில் 2 வது மாடியில் வசித்து வந்தார். 

அதே நேரத்தில், இளம் பெண் யாமினிக்கு கடந்த சில வருடங்களாக அவரது தாயார், தொடர்ந்து மாப்பிள்ளை பார்த்து வந்தார். ஆனால், தனது பெண்ணுக்கு சரிவர எந்த வரனும் அமையவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அந்த இளம் பெண்ணின் திருமணம் தொடர்ந்து தடைப் பட்டுக்கொண்டே வந்ததாகக் கூறப்படுகிறது. 

இப்படி, வரன் சரிவர அமையாத நிலையில், இளம் பெண் யாமியிடம் அவரது தாயார் தாட்சாயிணி, மீண்டும் மீண்டும் திருமணம் பற்றி பேசிக்கொண்டே வந்துள்ளார். திருமணம் தொடர்ந்து தடைப்பட்டு வந்துகொண்டே இருந்ததாலும், அதைப் பற்றி தன்னுடைய தாயார் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்ததாலும், கடும் விரக்தி அடைந்த இளம் பெண் யாமினி, கடந்த சில நாட்களாக வீட்டில் யாரிடமும் சரிவர பேசாமல் இருந்துள்ளார். 

இந்நிலையில், தனது வீட்டில் 2 வது மாடியில் உள்ள பால்கனியில் இருந்து, திடீரென கீழே குதித்து விட்டார். இதில், பலத்த காயம் அடைந்த யாமினி, அருகில் உள்ள சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவசர அவரசமாக அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தொடர்ந்து தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த தலைமைச் செயலக காலனி போலீசார், வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதே போல், சென்னை திருவொற்றியூரில் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தேநீர் கடைக்காரை போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சென்னை திருவொற்றியூர் புதுத்தெரு பகுதியைச் சேர்ந்த ரமேஷ், அப்பகுதியில் தேநீர் கடை நடத்தி வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் 15 வயது சிறுமி, 10 வயது சிறுமி மற்றும் 9 வயது சிறுவன் ஆகியோரிடம் ரமேஷ், தொடர்ச்சியாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்து பயந்து போன சிறுமிகள் 3 பேரும், இது குறித்து தங்களது பெற்றோர்களிடம் கூறி அழுதுள்ளனர். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமிகளின் பெற்றோர்கள், திருவொற்றியூர் காவல் நிலையத்தில் ரமேஷ் மீது புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. இதனையடுத்து, திருவொற்றியூர் மகளிர் காவல் துறையினர், சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ரமேஷை, போக்சோ சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.