காஞ்சனா படத்திற்கு பிறகு திரை ரசிகர்களிடையே திகில் படங்களுக்கென வரவேற்பு அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.சி அரண்மனை படத்தின் இரண்டு பாகங்களை இயக்கினார். நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் ஸ்பெஷலிஸ்ட்டாக இருந்தவர், திகில் படங்களையும் இயக்கி அசத்தினார். தற்போது அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கி வருகிறார். 

அவ்னி சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார். ஆர்யா ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். சாக்ஷி அகர்வால், விவேக், மனோபாலா ஆகியோர் முக்கிய ரோலில் ரோலில் நடிக்கின்றனர். சத்யா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனுக்கு முன் அரண்மனை-3 படத்தின் படப்பிடிப்பு குஜராத் அருகே ராஜ்கோட்டில் நடந்து வந்தது. ராஜ்கோட்டில் அமைந்துள்ள பிரம்மாண்ட அரண்மனையை தேர்ந்தெடுத்து, படப்பிடிப்பை நடத்தி வந்தார் சுந்தர்.சி.

இந்நிலையில் அரண்மனை 3 படத்தின் படப்பிடிப்பு பணிகள் மீண்டும் துவங்கியுள்ளது. இதில் கலந்த கொள்ளவிருக்கும் ஆர்யா ஷூட்டிங்கிற்கு புறப்படும் புகைப்படங்களை வெளியிட்டார். ரஞ்சித் படம், ஆர்யா 32, தற்போது அரண்மனை 3 என தொடர்ச்சியாக படப்பிடிப்பு பணிகளில் கலந்து கொள்ளும் ஆர்யாவை பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள். சிலம்பரசன் போன்று தொடர்ச்சியாக படப்பிடிப்பு பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் என்றும் புகழாரம் சூட்டி வருகின்றனர் இணையவாசிகள். 

பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் ஆர்யா 30. வட சென்னையில் உள்ள இளைஞன் தனது பாக்ஸிங் கனவுகளை எப்படி நிஜமாக்கிக்கொள்கிறான் என்பதைப் பற்றிய கதையாக இப்படம் அமையவுள்ளது. இப்படத்துக்காகக் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, தனது உடற்கட்டை முற்றிலுமாக மாற்றியுள்ளார் ஆர்யா. இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. 

நடிகர் ஆர்யாவுக்கு கடந்த ஆண்டு வெளியான காப்பான் மற்றும் மகாமுனி திரைப்படங்கள் வெளியாகியது. இந்த இரண்டு படங்களிலும் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஆர்யா. தற்போது ஆர்யா நடிப்பில் உருவாகி ரிலீஸுக்கு ரெடியாக இருக்கும் படம் டெடி. ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ளார். இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.  யுவா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து அனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் விஷாலுடன் இணைந்து நடிக்கவுள்ளார். சமீபத்தில் நடிகை மிருணாளினி ரவி படத்தில் இணைந்துள்ளார். தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.