ஆபாசப் படங்களில் நடித்து மிகவும் பிரபலமான பிரபல கவர்ச்சி நடிகை கிம்கர்தாஷியான் “ஓம்” முத்திரை கம்மல் அணிந்ததால், புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது.

பிரபல கவர்ச்சி நடிகையான கிம்கர்தாஷியான், சர்வதேச மாடல் அழகியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

எனினும், நடிகை கிம்கர்தாஷியான், ஆபாசப் படங்களில் நடித்ததின் மூலமாகவே மிகவும் பிரபலமானவராக அறியப்பட்டார். அதாவது, அவர் ஆபாசப் படங்களில் நடித்த பிறகே பிரபலம் அடைந்தார் என்று கூறப்படுகிறது. எனினும், அதன் தொடர்ச்சியாக, அவர் தற்போது தொடர்ந்து கவர்ச்சி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

பல ஹாலிவுட் படங்களிலும் நடித்து உள்ள நடிகை கிம்கர்தாஷியான், சமூக வலைத்தளங்களில் அடிக்கடி அறைகுறை உடையில் தன்னுடைய ஆபாசப் படங்களையும் வெளியிட்டு வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.

இதனால், சமூக வலைத்தளத்தில் இவரை பின் தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கையும் பெரிய அளவில் இருக்கிறது. இதன் மூலமாக, தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களிலும் வணிக பொருட்களை அறிமுகம் செய்து, அதன் மூலகமாகவும் அவர் பணம் சம்பாதித்து வருகிறார். 

அதே நேரத்தில், நடிகை கிம்கர்தாஷியான் தற்போதைய சொத்து மதிப்பானது, இந்திய மதிப்பில் 7 ஆயிரத்து 400 கோடியாக மதிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தான், நடிகை கிம்கர்தாஷியான் காதில் வட மொழி எழுதப்பட்ட “ஓம்” முத்திரை டிசைன் கொண்ட கம்மல் அணிந்து, அவர் போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை எடுத்து உள்ளார். அந்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தள பக்கங்களிலும் வெளியிட்டு உள்ளார். இதன் காரணமாக, இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பெரும் வெளியான நிலையில், தற்போது இது புதிய சர்ச்சைக்கு வித்திட்டு உள்ளது.

அதன் படி, “இந்துக்களின் புனிதமாகக் கருதும் “ஓம்” முத்திரையைக் கொச்சைப்படுத்தி இருப்பதாகவும், இதற்காகக் கவர்ச்சி நடிகை கிம்கர்தாஷியான், மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றும், சமூக வலைத்தளத்தில் மத வாத இயக்கத்தினர் பலர் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். நடிகை கிம்கர்தாஷியானின் இந்த புதிய சர்ச்சை, ஹாலிவுட் சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.